இன்றைய நடிகர்கள் பலரும் தன்னால் இயன்ற உதவியை மக்களுக்கு செய்து வருகின்றனர். இயற்கை பேரிடர் களத்தில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் உதவுவது போன்ற செயல்களை செய்துவருகின்றனர் இந்நிலையில்  நடிகை வனிதாவின் அப்பாவும் நடிகருமான விஜயகுமார் முதவருக்கு ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அது செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு உயர்ந்தது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரை அளவுடன் திறந்துவிடுமாறு  குறிப்பிட்டார்.

அவரது கடிதத்தில் கடந்த சில நாட்களாக சென்னையில் பல இடங்களில் பெய்துவரும் கனமலயினால் செம்பரம்பாக்கம் ஏறி தற்போது 21 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது.. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு பொருள்சேதம் மட்டுமின்ரி  பலரும் இதனால் பாதிக்க படுகின்றனர் என அஞ்சப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமலையினால் செம்பரம்பாக்கம் நீர் திறக்கப்பட்டு எங்கள் பகுதியான ஈகட்டுதங்கல் பகுதியில் இருந்து அடையாறு வரை வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டு பொருள் சேதம்  மட்டுமின்றி பல குடும்பங்களும் இந்த அவசர நிலையில் சிக்கினர். 2015 ஆம் ஆண்டை போலவே தற்போது மலை பெய்து ஏறி 21 அடியை தாண்டிக்கொண்டிருக்கிறது.

சரியான முறையில் நீரை திறக்காவிட்டால் அந்த அண்டைபோலவே சேதம் ஏற்படக்கூடும். அதனை தடுக்க இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தங்களால் இதனை செய்ய முடியும் என முழு மனதாக நம்புகிறேன். கரையோரம் வாழும் மக்களை காப்பாற்ற வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். இப்படி சமூக அக்கறை கொண்ட பல நிறுவனங்களும் ஏற்கனவே அரசுக்கு இதை தெரிவித்த நிலையில் நடிகராக இவர் மக்களின் நலன் கருதி இவர் கூறியதை கண்டு நெகிழ்ந்துபோயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here