மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசிய பல காட்சிகளை நீக்கிய டிவி – அட இத போய் நீக்கிட்டீன்களே !! கடுப்பான ரசிகர்கள்

616

தமிழ் சினிமா துறையில் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பு அதில் வரும் பாடல்களை ஒவ்ஒன்றாக வெளியிடுவது வழக்கம்.அதே போல் அண்மையில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில், லோகேஷ் அவர்களின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படம் மாஸ்டர் அந்த படத்தின் இசைவெளியிட்டு விழா அண்மையில் நடை பெற்றது.அதில் அந்த படத்தில் நடித்த அணைத்து நடிகர்கள், மற்றும் நடிகைகள் கலந்துகொண்டனர்.

நடிகர் விஜய் அவர்கள் எப்போதும் இவர் படத்திற்கான இசை வெளியிட்டு விழாவில் இவர் பல கருத்துக்களை கூறி வருவது வழக்கம் அதே போல் இந்த முறையும் தளபதி விஜய் அவர்கள் மேடையில் என்ன குட்டி கதை சொல்ல போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த மக்கள் மற்றும் விஜய் ரசிகர்கள்.இந்த நிகழ்ச்சி முழுவதும் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி தொகுத்து வழங்கியது.

இந்த படத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் மோதிக்கொள்வது போல் இருந்த அந்த போஸ்டரரை பார்த்த ரசிகர்கள் படத்திற்காக ஆவலாக காத்துக்கொண்டு இருகிறார்கள்.தற்போது மாஸ்டர் படத்தை இயக்கி வரும் லோகேஷ் அவர்கள் இதற்கு முன்னால் வெளியான மாநகரம், மற்றும் ரசிகர்கள் அனைவரயும் ஈர்த்த படமான கைதியை இயக்கிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது.இந்த இசை வெளியிட்டு விழா மேடையில் பேசிய விஜய் அவர்கள் பல கருத்துக்களை கூறினார்.அனால் அதில் பத்தி மட்டும் தான் டிவியில் ஒளிபரப்பு ஆனாது.

அதில் விஜய் அவர்கள் “மக்களுக்கு தேவையான சட்டத்தை உருவாக்க வேண்டுமே தவிர சட்டத்தை உருவாக்கி விட்டு அதனை மக்களிடம் திணிக்கக் கூடாது” .என கூறியுள்ளார் .இந்த காட்சிகள் தொலைக்கட்சியில் ஒளிபரப்பு ஆகவில்லை.நடிகர் விஜய் அவர்கள் சிஏ ஏ பற்றி பேசியுள்ளார இல்லையா என தெரியவில்லை.மேலும் அவர் பேசிய அந்த கருத்தை மக்கள் இணையதளங்களில் பரப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here