தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பெரிதளவில் படங்கள் ஏதும் இல்லாமல் தவித்து வரும் நிலையில் கைவசம் டசன் கணக்கில் படங்களை வைத்து கொடிகட்டி பறந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தனது திரைபயனத்தை சாதாரண பின்னணி நடிகராக துவங்கிய விஜய் சேதுபதி தனது தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் ஹீரோவாக களம் புகுந்து தற்போது தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக கலை கட்டி வருகிறார்.

இதனை தொடர்ந்து ஹீரோவாக மட்டுமின்றி கதைக்கு ஏற்ப குணசித்திரம் மற்றும் வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்துள்ளதோடு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். ஆரம்பத்தில் பல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்து வந்த விஜய் சேதுபதி சமீபகாலமாக ஹீரோவாக நடித்து வந்த படங்கள் அனைத்துமே தோல்வியை சந்திக்க மக்கள் இவர் வில்லனாக நடித்தாலே நல்ல இருக்கும் ஹீரோ எல்லாம் இவருக்கு செட்டாகாது என சொல்லும் அளவிற்கு ஒரு நிலைக்கு வந்து விட்டனர் எனலாம்.

இதன் காரணமாக இது கூறித்து அறிந்த விஜய் சேதுபதி தற்போது ஹீரோக்கு முக்கியத்துவம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் முடிவில் உள்ளார். இவ்வாறு இருக்கையில் தமிழ் மொழியை தொடர்ந்து மற்ற மொழிப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஹிந்தியில் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். அந்த தொடரில் இவருக்கு ஜோடியாக ராசிகன்னா நடித்து வருகிறார். மேலும் இவரை இந்த தொடரில் நடிக்க வைக்க பரிந்துரை செய்தது முழுதும் விஜய் சேதுபதி தானாம்.

ராசிகன்னா விஜய் சேதுபதியுடன் இணைந்து தமிழில் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ராசிகன்னாவை சேதுபதி சிபாரிசு செய்யவில்லை என்றாலும் இயக்குனரின் தேர்வும் அவர் தான் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. எது எப்படியோ ஏற்கனவே படங்களில் பிசியாக இருக்கும் மக்கள் செல்வன் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.இந்த வெப் தொடரும் பலத்த வெற்றியடைந்து விட்டால் அப்பறம் மனுசனா கையில புடிக்க முடியாது என பலர் கிசுகிசுத்து வருகின்றனர்.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here