பொதுவாகவே திரையுலகில் நடிக்கும் வாழ்க்கை பெரும்பாலும் மேற்கத்திய கலாச்சார முறைகளை பின்பற்றி வருகிறது எனலாம். அந்த அளவிற்கு பல நடிகர் நடிகைகளின் திருமண வாழ்க்கை அப்படித்தான் அமைந்து வருகிறது இன்று ஒருவருடன் கல்யாணம் என அறிவித்த நிலையிலேயே அடுத்த சில மாதங்களிலேயே அவருடன் விவாகரத்து ஆகி மற்றொருவருடன் திருமணம் என அறிக்கை விரும் அளவிற்கு தான் உள்ளது பல சினிமா பிரபலங்களின் இயல்பு வாழ்க்கை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் தற்போது பல வித்தியாசமான கதை அம்சங்களை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் வரவேற்பை பெற்றதோடு இவருக்கு திரையுலகில் தனி அங்கீகாரத்தையும் பெற்று தந்தது. இவ்வாறு சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் இவரின் திருமண வாழ்க்கை தான் தற்போது தடம் மாறி இரண்டாவது திருமணம் செய்யும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது. இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஆர்யன் ஏனம் மகனும் உள்ளார். திருமணம் நடந்து எழு வருடங்களுக்கு ஆன நிலையில் இவர்கள் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாதம் வர அது இறுதியில் இவர்களை விவாகரத்து வரை கொண்டு சென்று தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் விஷ்ணு விஷால் கடந்த சில வருடங்களாக பேட்மிட்டன் வீராங்கனையான ஜூவால கட்டாவை காதலித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் அவரது இரண்டாவது திருமணத்திற்கு பின்னரும் கூட தனது முதல் மனைவி மற்றும் அவரது மகன் பெயரின் முதல் எழுத்தை தனது கையில் ஏ,ஆர் என ஆங்கிலத்தில் பச்சை குத்தி கொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் அவரது முதல் மனைவி யார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. விஷ்ணு விஷாலின் மனைவி ரஜினி நடராஜன் பிரபல நடிகரும் இயக்குனருமான நடராஜனின் மகளாவர் .

மேலும் இவர் ரஜினியின் நெருங்கிய நண்பராவர் அந்த காலத்தில் திரைப்படங்களில் நடிகராக நடித்து வந்த இவர் ரஜினியின் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில் தற்போதும் கூட சின்னத்திரையில் ரோஜா மற்றும் வேலைக்காரன் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்,

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here