தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் காலமானார் ??சோகத்தில் திரையுலகம் !!

517

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான விசு அவர்கள் 74 வயதில் காலமானார்.இவர் கோலிவுட் திரையுலகில் தனது முதல் படமான Pattina Pravesam என்னும் படத்தில் எழுத்தாளராக அறிமுகமாகினார்.பின்பு அப்படியே படி படியாக முன்னேறி அன்றைய பிரபல நடிகரான ரஜினிகாந்தவுடன் இணைந்து தில்லு முள்ளு என்னும் படத்தில் இவர் நடித்துள்ளார்.விசு அவர்கள் நடிகர், இயக்குனர், தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்தவர்.

விசுவின் முழுபெயர் மீனாட்சி சுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் ஆகும்.இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாலச்சந்திரன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.இவர் இயக்கிய படங்களில் மெல்லாம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இயக்குனர் விசு அவர்கள் தமிழ் சினிமாவிற்கு குடும்பம் ஒரு கதம்பம், மணல் கயிறு, புதிய சகாப்தம் போன்ற பல அருமையான படங்களை ரசிகர்களுக்கு தந்தவர்.

இவர் அன்றைய பிரபல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார் மேலும் அவர்களை வைத்து படங்களையும் இயக்கியுள்ளார்.இவர் தனது தமிழ் சினிமா துறையில் கடைசியாக இயக்கிய படம் தங்கமணி ரங்கமணி இவர் தனது 72வயதில் இந்த படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விசு வர்களுக்கு திருமணம் ஆகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.இவருக்கு வயது கடந்து வந்த நிலையில் உடம்பில் சிறுநீரக கோளறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டர்.தற்போது சிச்கிசை பலனின்றி காலமானார்.இவர் செய்தி தமிழ் சினிமா ரசிகர்களையும் மற்றும் சினிமா துறையை சார்ந்த அனைவரயும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here