தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆத்மிகா.இவர் கோலிவுட் துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவர் ஹிப்ஹப் தமிழா ஆதி யுடன் இணைந்து நடித்து வெளியான மீசைய முறுக்கு மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.மேலும் இவர் தற்போது தான் அறிமுகமாகியுள்ளார்.இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் இருகின்றனர்.
இந்நிலையில் இவரது வீட்டில் நேர்ந்த துயர சம்பவம் இவரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பெரும்பாலும் பெண் பிள்ளைகளுக்கு தனது தந்தை தான் அவர்களது முதல் ஹீரோவாக இருந்து வருகிறார்கள்.பெண்கள் எப்பொழுதும் தனது தந்தைகளை தான் பெரிதும் நேசித்து வருவார்கள்.
நடிகை ஆத்மிகாவின் தந்தை சில தினங்களுக்கு முன்பு இதய அடைப்பு காரணமாக உயிர் இழந்துள்ளார்.இந்த செய்தியை நடிகை ஆத்மிகா அவர்கள் அவரது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதலை கூறி வருகிறார்கள்.அந்த பதிவில் மிஸ் யு அப்பா நான் உங்களுக்கு குட்பாய் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை,நீங்கள் இல்லாதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.நீங்கள் எனக்கு கற்று கொடுத்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
அதே போல் ஒருபோதும் நான் உங்க பெயரை கீழே செல்ல விட மாட்டேன்.மேலும் நான் ஒருபோதும் பல விமர்சனங்களுக்கு மனம் உடைந்து போக மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவை கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு அறுதல் கூறி வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.