பொதுவாகவே நாம் எந்த பெண்ணையாவது திட்ட வேண்டும் அல்லது அழகாக வர்ணிக்க வேண்டும் என்றால் உடனே நாம் பயன்படுத்தும் ஒரு வாக்கியம் என்றால் அது நீ என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா எனத்தான் கேட்போம். காரணம் அந்த அளவிற்கு தனது அழகால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு உலக அழகி எனும் பட்டத்தையும் பிரபலத்தையும் இன்றளவும் வைத்திருக்கும் பிரபல நடிகை என்றால் அது உலக அழகி பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய்.

தென்னிந்திய சினிமாவில் இவருடன் நடித்திராத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிதுள்ளதோடு மேலும் பல நடிகர்கள் அவருடன் நடிக்க ஏங்கும் அளவிற்கு பலரது மனதில் கனவுகன்னியாகவும் தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் இன்றளவும் வலம் வருகிறார். மேலும் இவர் ஹிந்தி, மலையாளம் , தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மற்றும் தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி ஒரு பிரபலத்தையும் இடத்தையும் ஏற்படுத்தி கொண்டார். இவ்வாறு தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த அம்மிணி கடந்த 2007- பாலிவுட் உலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் பிரபல முன்னணி நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பல முன்னணி நடிகைகள் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில் திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையிலும் தற்போதும் பல மொழிப்படங்களில் வேற லெவல் மாடர்னில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா தற்போது வளர்ந்து அம்மாவையே மிஞ்சும் பேரழகில் அழகு தேவதையாக உள்ளார். இந்த நிலையில் அந்த அழகு தேவதையின் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி  வருகிறது .

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here