“5-படத்துக்கு மேல ஜோடிய நடிச்சும் விடாம அவருக்கூடத்தான் நடிப்பேன்” அடம்பிடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் !! அட யாருப்பா அந்த அவரு!!

83172

பொதுவாக வெள்ளித்திரையில் படங்களில் பெரும்பாலான நடிகைகள் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற கனவுடனும் ஆசையுடனுமே திரையுலகில் நுழைகிறார்கள் இருப்பினும் அவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு ஹீரோயின்கள் வாய்ப்புகள் அவ்வளவாக அவர்களுக்கு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவர்களுக்கு போதிய அளவு வரவேற்பும் மக்கள் மத்தியில் பிரபலமும் கிடைக்காத நிலையில் பல நடிகைகள் சினிமாவை விட்டே காணாமல் போயுள்ளனர். இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக இல்லாமல் அம்மா, தங்கை உட்பட கதைக்கு ஏற்ப பல முக்கிய

கதாபாத்திரங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் சமீபகாலமாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் இவ்வாறு இருக்கையில் இவரை போலவே திரையுலகில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பு திறமையின் மூலம் வளர்ந்து இன்றைக்கு தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வலம் வருவதோடு மக்கள் பலரை தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரும் தற்போது வருடத்திற்கு பத்து

படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்து வருவதோடு கதைக்கு ஏற்ப பல்வேறு மாறுபட்ட கேரக்டரிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய சேதுபதிக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷால் பெரும் தொல்லையாக இருக்கிறதாம் அது குறித்து கேட்டபோது, இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட ஐந்து படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்துள்ள நிலையில் இன்னமும் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் தன்னை ஹீரோயினாக சிபாரிசு செய்ய கூறி வற்புறுத்தி வருகிறாராம் அம்மிணி. இதன் காரணமாக தலைவரும் தான் கமிட்டாகும் படக்குழுவினருடன் அம்மிணியை

 

நடிக்க வைக்க கூறி வரும் நிலையில் படக்குழுவினர் ஏற்கனவே நீங்கள் இருவரும் இணைந்து அதிக படங்களில் நடித்துவிட்ட காரனத்தால் இனியும் சேர்ந்து நடித்தால் படத்தை பார்க்கும் ரசிர்களுக்கு போரடித்து விடும் என அவரை வேண்டாம் என மறுத்து வருகிறார்களாம். இந்நிலையில் இதை எப்படி ஐஸ்வர்யாவிடம் சொல்லுவது என தெரியாமல் முழிபிதுங்கி வருகிறார் விஜய் சேதுபதி இருப்பினும் அவரை விடாமல் துரத்தி வருகிறார் அம்மிணி . இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது .

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here