தற்போது திரையுலகில் பல முன்னணி நடிகைகள் இருந்த போதிலும் அதில் பல நடிகைகள் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டுமே பெரும்பாலும் நடித்து வருகின்றனர். சொல்லப்போனால் இவர்கள் திரைப்படங்களில் கதைக்காக ஹீரோயின் வேண்டுமென்ற ஒரு காரணத்திற்காக நடித்து போகும் நடிகைகள் தான் ஏராளமாக உள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த வகையில் தனது ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்து பின் பொதிகை தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து அதனை தொடர்ந்து பின்னணி பாடகியாக திரையுலகில் நுழைந்து அதன் பின் திரைபடங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அண்ட்ரியா ஜெர்மியா.

தமிழில் இவர் பிரபல இயக்குனரான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிரபல முன்னணி நடிகரான உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான வேட்டையாடு விளையாடு படத்தில் கதாநாயகியாக நடித்து மக்களிடையே அறிமுகமானார். தான் நடித்த முதல் படத்திலேயே கமல் அவர்களுடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பலத்த வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றார். மேலும் பின்னணி பாடகியான இவர் பல படங்களில் பாடியுள்ளார்.

மேலும் மற்ற கதாநாயகிகளை போல படங்களில் ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்காமல் சிறந்த கதைககளை தேர்ந்தெடுத்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகை, பின்னணி பாடகி,பாடலாசிரியர், இசையமைப்பாளர், பின்னணி குரல் என பன்முகத்திறமை கொண்ட அண்ட்ரியா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாளிகை எனும் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வரும் இவர் இன்னும் பல படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அண்ட்ரியா அவ்வபோது தனது மாடர்ன் புகைபடங்களை வெளியிடுவது வழக்கம்.இதன் மூலம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது சிறுவயது புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வைராளாகி வருகிறார். சிறுவயதில் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் குழந்தையாக இருக்கும் அவரது புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் திக்கு முக்காடி போயுள்ளனர். தனது அம்மாவை அப்படியே செராக்ஸ் எடுத்தது போல் உள்ளார் அண்ட்ரியா.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here