திரையுலகில் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்களோ அதை காட்டிலும் அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் குழந்தைகள் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெறுவதோடு தங்களுக்கென தனி அடையாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள். அந்த வகையில் அந்த காலத்தில் இருந்து இன்று வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் தற்போது வளர்ந்து பல படங்களில் நடிகர் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போதும் பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் தொடர்ந்து சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டார். இதனை தொடர்ந்து மலையாளத்தை அடுத்து தமிழில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் அவர்களின் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை அனிகா சுரேந்திரன். இந்த படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பெருமளவில் வரவேற்கபட்டதோடு இவருக்கு தனி அங்கீகாரத்தையும் பேரு கொடுத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தல அஜித் அவர்களுக்கு மகளாக விஸ்வாசம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். சொல்லப்போனால் பலரும் இவர் தான் தல அஜித்தின் மகள் எனவே நம்பும் அளவிற்கு சிறப்பாக நடித்து இருந்தார். இப்படி இருக்கையில் தொடர்ந்து பல வருடங்களாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா தற்போது வளர்ந்து இளம் ஹீரோயினாக மாறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வளர்ந்து பருவபெண்ணாக மாறியுள்ள அனிகா அதை காட்டும் வகையில் அவ்வபோது மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்து வந்தார்.
இந்நிலையில் ஹீரோயினாக நடிக்க அம்மிணி போட்ட திட்டம் கைகூடிவிட்டது. அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான கப்பெல்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம் அனிகா. மேலும் அணிகாவுக்கு 16-வயதே ஆன நிலையில் அம்மிணிக்கு ஹீரோயினாக நடிக்க கிடைத்துள்ள வாய்ப்பு அவருக்கு மட்டுமின்றி அவரது ரசிகர்களுக்கும் பெருத்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
View this post on Instagram
View this post on Instagram