வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் குழந்தைகளும் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். படங்களில் இவர்கள் வரும் காட்சிகள் சிறிதளவில் இருந்தாலும் இயல்பான நடிப்பாலும் சுட்டித்தனமான நடிப்பாலும் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறார்கள். அந்த வகையில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக கலக்கி வருபவர் நடிகை அணிகா சுரேந்திரன்.

மேலும் தமிழில் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்த படத்தில் தல அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பெரிதளவில் பேசப்பட்டவர் அனிகா. சொல்லப்போனால் இந்த படத்தின் மொத்த கதையும் இவரை மையமாக வைத்தே நகர்ந்தது. மேலும் இவரது நடிப்பு இந்த படத்தில் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் வரவேற்கபட்டதோடு இவருக்கு தனி ஒரு அடையாளத்தையும் பெற்று கொடுத்தது. இந்நிலையில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த அனிகா தற்போது வளர்ந்து இளம் ஹீரோயினாக உருமாறி உள்ளார்.

இப்படி இருக்கையில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததை தொடர்ந்து தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனை தொடர்ந்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா ஆரம்பத்தில் அடக்க ஒடுக்கமாக பாவடை தாவணியுடன் இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார். இப்படி சுமூகமாக போய் கொண்டிருந்த நிலையில் இது வேலைக்கு ஆகாத என முடிவெடுத்த அனிகா இனி மாடர்னுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து அரைகுறை ஆடையில் வேற லெவலில் போடோஷூட் நடத்தி அதன் புகைபடங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

இந்த வகையில் தினமும் தந்து இணைய பக்கத்தில் மாடர்ன் புகைபடங்களை அள்ளிதெளித்த வண்ணம் உள்ளார் அம்மிணி. இதை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம குட்டி பொண்ணு அனிகாவா இப்படி எதோ வேற லெவல் மாடல் மாதிரி இருக்காங்களே என வாயடைத்து போயுள்ளனர். இன்னும் கொஞ்சம் காலத்தில் நயன்தராவுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாறிவிடுவார் போல என பல கருத்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Anikha surendran (@anikhasurendran)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here