திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் என்றாலே மக்கள் மத்தியில் வெகு பிரபலம் தான் அந்த வகையில் அவர்கள் என்ன செய்தாலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து விடும். அந்த வகையில் மேலும் அவர்களது திருமண வாழ்க்கை மற்றும் காதல் பற்றி விஷயங்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை . அப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் விஷால் அவர்கள். இவர்கள் பெரும்பாலும் படங்களில் நடித்து பிரபலமானதை காட்டிலும் சர்ச்சைகளின் மூலம் பிரபலமானது தான் அதிகம். அந்த அளவிற்கு இவர் மீது சர்ச்சைகளை கொட்டி தீர்த்துள்ளனர் பலர் அதற்கு காரணம் பெரும்பாலும் இவரது காதல் மற்றும் கல்யாணம் பற்றியதாக தான் இருந்துள்ளது.

இவ்வாறான நிலையில் விஷால் அவர்கள் தெலுங்கு மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் மேலும் தெலுங்கில் பிரபல பட தயாரிப்பாளர் ஆன ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகனாவார். மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பதோடு தயாரிப்பாளர் சங்க பொது செயலாளராகவும், நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவ்வாறான நிலையில் இவர் மீது பல காதல் வதந்திகள் வந்த நிலையில் அதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கடந்த 2019-ம் ஆண்டு விஷாலுக்கு அனிஷா என்பவருக்கும் ஹைதரபாத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் இவர்களது திருமணம் அந்த ஆண்டிலேயே செப்டம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கையில் இன்றளவு வரைக்கும் இவர்களது திருமணம் குறித்த எந்த தகவலும் இல்லை. இவ்வாறாக நிலையில் மணப்பெண் அனிஷா அவர்கள் தனது இணைய பக்கத்தில் இருந்து தங்களது திருமண பதிவு மற்றும் நிச்சய புகைப்படங்களை எல்லாம் முழுவதும் நீக்கி உள்ளார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு விஷாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இணையத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த வருடம் அதுவும் இல்லாமல் போனது இதன் மூலம் இவர்களது திருமணம் வாழக்கை நின்று போனது உறுதியாகி உள்ளதுபோல் தெரிகிறது. இந்த தகவலை பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் கூட ஒரு பேட்டியில் கூட கூறி இருந்தார். இப்படி இருக்கையில் சில மாதங்கள் ஆன நிலையில் விஷாலின் மனைவியாக வர இருந்த அனிஷா அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கடற்கரையில் நீச்சல் உடையில் படு மாடர்னாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த பலர் உங்க கல்யாணம்  என்ன ஆச்சு என்பது போலனா பல கருத்துகளை கேட்டு வருகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here