சினிமாவில் பொருத்தவரை நடிகர் நடிகைகள் எந்த அளவிற்கு படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகிறார்களோ அதை காட்டிலும் அந்த படங்களில் ஒரு சில பாடல்கள் மற்றும் கிளாமர் காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பிரபலமாவதை கடந்து பலரது மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் அந்த கால படங்களில் தனது வசீகரமான தோற்றம் இளமையான நடனத்தால் பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் பிரபல முன்னணி நடிகை டிஸ்கோ சாந்தி. ஆரம்பத்தில் இவர் கடந்த 1985-ம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு எனும் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளதோடு பல படங்களில் கிளாமர் பாடல்களுக்கு நடனமாடியுள்ளார். மேலும் இவர் தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்திஎன பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் பல வருடங்கள் முடிந்த நிலையில் சமீபத்தில் தனது சினிமா வாழ்க்கை மற்றும் தனது கணவரின் இழப்பு குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் தொடக்கத்தில் நான் சினிமாவில் விருப்பமில்லாமல் தான் நடிக்க வந்தேன் அதற்கு காரணம் எனது குடும்பத்தின் வறுமையே இந்நிலையில் முதலில் நான் கதாநாயகியாக தான் நடிக்க வந்தேன். ஆனால் எனக்கு கிடைத்ததோ கிளாமர் காட்சிகள் மற்றும் கிளாமர் பாடலுக்கு நடனமாடுவது போன்ற வாய்ப்புகள் தான் இதன் காரணமாக பல நாட்கள் என்னை நினைத்து புலம்பி அழுதுள்ளேன். ஒரு சில சமயங்களில் இந்த சினிமாவே வேண்டாம் என நினைப்பேன் ஆனால் எனது வறுமையின் காரணமாக அதை ஏற்று நடித்தேன்.

மேலும் என் கிளாமர் நடனத்தை பார்த்து நானே பலமுறை முகம் சுளித்து போயுள்ளேன் இதனால் எனக்கு என் மீது கோபமும் பலத்த வேதனையும் இருந்தது. மேலும் என் படங்களை பார்க்க வேண்டாம் என என் குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவேன் இதனால் நாங்கள் ஒன்றாக சேர்ந்து படங்களே பார்த்தது இல்லை. இபப்டி ஒரு நிலையில் கடந்த 1996-ம் ஆண்டு எனது நெருங்கிய நண்பரான ஸ்ரீ ஹரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். அதுவும் ஆரம்பத்தில் ஒரு நாள் கோவிலில் சாமி கும்பிடும் போது எனக்கே தெரியாமல் என் கழுத்தில் தாலி கட்டிவிட்டார். இந்நிலையில் எனக்கு கல்யாணம் ஆனால் தாலியை கோவில் உண்டியலில் போடுவதாக வேண்டி இருந்தேன் அதன்படி நானும் தாலியை கழட்டி போட்டு விட்டேன்.

அதன் பிறகு எனது கூட பிறந்தவர்களுக்கு திருமணம் முடிந்த பின்னரே நான் திருமணம் செய்து கொண்டேன். எனது சந்தோசமாக சென்று கொண்டிருந்த நிலையில் எனது கணவருக்கு எதிர்பாராத விதமாக உடல்நிலையில் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தோம் அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கபட்டு உடல்நலம் தேறி வந்த நிலையில் மருத்துவர்களோ எதோ தவறுதலாக போட்ட ஊசியினால் அவர் காலமானார். இதுகுறித்து கேட்டபோது தெரியாமல் செய்து விட்டோம் இதற்குநஷ்ட ஈடோ அதை பணமாக கொடுத்து விடுகிறோம் என கூறினார்கள் ஆனால் நான் அதை மறுத்து வருத்ததுடன் அவர்களை திட்டிவிட்டு வந்துவிட்டேன். இது ஒரு புறம் இருக்க எனது கணவருக்கு முன்னரே எனது மகள் காலமாகி விட்டாள் அவளது நினைவாக எனது கணவர் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார் தற்போது அதை நான் கவனித்து வருகிறேன் எனது பக்கபலமாக எனது மகன்கள் எனக்கு உதவி வருகிறார்கள் என மனக்குமுறலுடன் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here