தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் தற்போது திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தும் ஆளே இருக்கும் இடம் தெரியாமல் அடையாளம் தெரியாமல் போயுள்ளனர். இதற்கு காரணம் தற்சமயம் பல இளம் நடிகைகள் திரையுலகிற்கு வந்த வண்ணம் இருப்பதே என்றாலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களது வயது திருமணம் போன்ற பல காரணங்களால் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் மார்க்கெட் இழந்து அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகைகளில் சற்று பப்ளியாக பருத்து அழகாக இருந்தால் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகில் தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அவர்கள் ஒரு சில படங்களில் நடித்தாலே மக்கள் மத்தியில் பிரபலமடைவதோடு தனக்கென தனி அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டாளாத்தையும் உருவாக்கி கொள்வார்கள். அந்த வகையில் வடமாநிலத்தில் இருந்து வந்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் நடிதுள்ளதோடு அந்த சமயத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்ததோடு பல படவாய்ப்புகளை கைவசம் வைத்திருந்தவர் அந்த பப்ளிமாஸ் நடிகை.

இவ்வாறு தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு கன்னடம் என பல மொழிப்டங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிசியாக வலம் வந்தார் அந்த அமுல்பேபி நடிகை. இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி வாரிசு நடிகர் ஒருவர் காதல் வயப்பட்டார். ஒரு படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கும் போது நெருக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறிப்போனது. இவ்வாறான நிலையில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவது பீச் பார்ட்டி என உல்லாசமாக இருந்த நிலையில் இவர்களது காதலுக்கு அம்மிணியின் வீட்டில் எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்தது. இதன் காரணமாக தனது தாயாரின் பேச்சை கேட்டுக்கொண்டு அந்த நடிகரை கழட்டிவிட்டு விட்டார் அந்த நடிகை.

இதனை தொடர்ந்து அந்த வாரிசு நடிகரும் படங்களில் ஏதும் நடிக்காமல் விரக்தியில் பாட்டிலும் கையுமாக சுற்றி வந்தார். இருப்பினும் தற்போது அந்த வாரிசு நடிகரின் சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் அந்த நடிகையின் வாழ்க்கை கேள்விகுறி ஆனதோடு திரையுலகில் படவாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் அந்த வாரிசு நடிகர் காதலிக்கும் போதே கல்யாணம் பண்ணி செட்டில் ஆகி இருக்கலாம் என புலம்பி வருகிறாராம் அம்மிணி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here