சினிமாவில் தற்பொழுது பல நடிகைகள் முன்னணி நடிகைகளாக நடித்து வருகின்றனர்.அதிலும் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு சில படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றனர். இவர்களது தோற்றம் மற்றும் அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது அடுத்த குஷ்பூ என அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா  மோத்வானியும் ஒருவராவர். 29-வயதான ஹன்சிகா மும்பையை சேர்ந்தவர் தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங்கில் ஆர்வம் காட்டி வந்தவர் தனது அழகான தோற்றத்தின் மூலம் தெலுங்கில் 2007-ம் ஆண்டு வெளியான தேசமுடுறு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடித்த முதல் படத்திலேயே தனது நடிப்பு மற்றும் அழகான தோற்றதால் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார். இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,  கன்னடம் போன்ற பல மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்தார். தமிழில் தனுஷ் மற்றும் மனிஷா கொய்ராலா இணைந்து நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே அறிமுகமானர். இதை தொடர்ந்து தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஹன்சிகா. எங்கேயும் காதல், வேலாயுதம், சேட்டை, பிரியாணி, அரண்மனை, போகன்  போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் ஹன்சிகாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது .

இவ்வாறு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் ஹிந்தியில் நடிபதற்காக தன் உடல் எடையை குறைத்து இருந்தார். அவரை கொழுக் மொழுக்கென்று பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்த மாற்றம் பிடிக்காத நிலையில் அதை விமர்சித்து வந்தனர். இதனால் தனது பட வாய்ப்புகள் கணிசமாக குறைந்த நிலையில் தற்போது மகா எனும் படத்தில் நடித்து வரும் ஹன்சிகா தற்போது தனது இணைய பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு வைராளாகி வருகிறார். இவர் சமீபத்தில் தனது அண்ணன் பிரசாந்த் மோத்வாணி அவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் முடிந்த நிலையில் தனது அண்ணன் மற்றும் அண்ணியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஹன்சிகாவின் அண்ணன் ஆன பிரசாந்த் மொத்வாணி திரைப்பட நடிகையான முஸ்கான் நான்சி  என்பவபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது அடல் பாடலுடன் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. தற்போது அதன் புகைப்படங்களை தனது இணைய பக்க்கத்தில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here