தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பல நடிகைகளும் கடந்த சில வருடங்களாக படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் குறைந்து வருவதோடு தங்களின் வயது ஒரு கட்டத்துக்கு மேல் போன நிலையில் அவர்கள் திருமண வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் விதமாக திருமணம் செய்து வருகின்றனர். இப்படி  இருக்கையில் பாலிவுட்டில் கடந்த 2004-ம் ஆண்டு ஹோ கயா நா எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்த முதல் படத்திலேயே தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டதோடு தனக்கென திரையுலகில் தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை காஜல் அகர்வால். இதனைதொடர்ந்து ஹிந்தியில் பிரபலமானதை அடுத்து தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகி பல

முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து இன்றைக்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.இவ்வாறு பிரபலமாக பிசியாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் காஜல் கடந்த 2020-ம் ஆண்டு மும்பையை சேர்ந்த முன்னணி தொழிலதிபரான கெளதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு தனது மனைவி கர்ப்பமாக இருப்பதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் காஜலின் கணவர். மேலும் காஜல் அகர்வாலும் தான் கர்ப்பமானதை தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது

கணவனுடன் வெளிநாடு சென்று தனது கர்ப்பகாலத்தை கவனித்து வந்ததோடு அடிக்கடி தனது இணைய பக்கத்தில் புகைபடங்களையும் பதிவிட்டு வந்தார் . இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காஜலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் . இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் காஜல் தனது மகன் பிறந்ததை தெரியபடுத்தும் விதமாகவும் மேலும் கர்ப்ப காலத்தில் தான் அனுபவித்த சில இன்னல்கள் குறித்தும் கூறியுள்ளார். அதில் தங்கள் மகன் கடந்த 19-ம் தேதி பிறந்த நிலையில் அவருக்கு நீல் கிச்சலு என பெயர் வைத்து இருப்பதாகவும் என் குழந்தை நீலை இந்த உலகத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீல் பிறந்த

அந்த சில நொடி என் மார்பில் அவனை பிடித்துக் கொண்டதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு. பயங்கர சந்தோசமாக இருந்தேன். அந்த நேரத்தில் தான் காதல் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு ரெஸ்பான்சிபிலிட்டியையும் புரிந்து கொண்டேன். குழந்தை பிறப்பு நிச்சயமாக எளிதானது அல்ல. உண்மையில் பிரசவத்திற்குப் பிறகு நான் நிச்சயமாக அழகாக உணர்கிறேன். இந்த பிறப்பு அனுபவம் எங்கேயும் கிடைக்காது. இந்த சந்தோஷம் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை  மூன்று நாட்கள் தூங்கவில்லை, குருதி வந்தது மேலும் மிகுந்த  சிரமப்பட்டேன். இருப்பினும்  என் மகனை பார்க்கும் போது அந்த கஷ்டம் எல்லாம் போய் விட்டது குழந்தையை கவனிப்பது, காலையில் நேரத்தில் எழுவது என்ற

நிலைமைக்குத் தள்ளப்பட்டாலும் குழந்தை பிறந்த பிறகு இந்த மாதிரி ப்ராசஸ் நிறைய கற்றுக்கொண்டேன். குழந்தைக்கு பால் கொடுப்பது, என்னுடைய உடல்நிலை, குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். இதை எல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறேன் என்ற பயம் இருந்தாலும் எப்படியோ கடந்து போய்க் கொண்டிருக்கிறேன். இந்த மாதிரி நேரங்களில் நான் ரொம்பவே விரும்பி பார்ப்பது குழந்தையின் முகம் தான்என நெகிழ்ந்து கூறியுள்ளார் . இதனையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here