தமிழ் சினிமாவில் நடித்த நடிகர் நடிகைகளில் பலர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.சிலர் ஊடகங்களில் போடோகளை
பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் மேலும் சிலர் ஊடகங்களில் கூட தென்படுவதில்லை.அந்த வகையில் தமிழில் சரண் இயக்கத்தில் ஜெயம் ரவி
நடித்து வெளியான இதயத்திருடன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான கதாநாயகி தான் காம்னா.அந்த படமானது பெரிதும் பேசப்படாவிட்டாலும் இவர் நடிப்பானது இளசுகளின் மனதை கவர்ந்தது. ஆனால்  அதன்பின் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

காம்னா மும்பையில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவறாவார். இவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாடல் துறையில் அதிகம் ஈடுபாடு காட்டியுள்ளார். அப்பொழுது நடைபெற்ற மும்பை அழகி போட்டியில் கலந்து கொண்டு 2 ஆம் இடத்தை பிடித்தவர்.மேலும் 2004 ஆம் ஆண்டு விளம்பர படத்தின் ஆல்பம் பாடல் ஒன்றை பாடினார். அதன் பின் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைபடத்தில் நடிக்கும் வாய்ப்பு அதிகம் கிடைத்தது. பின்னர் ‘ராஜாதிராஜா” காசேதான் கடவுளடா’ போன்ற படங்களில் மட்டும் நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இருப்பினும் அம்மினிக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் அதற்கு பிறகு 2014 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. மேலும் இதனை தொடர்ந்து படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இவ்வாறு இருக்கையில் பல வருடங்களாக காம்னா என்ன செய்து கொண்டுள்ளார்.

என தெரியாமல் இருந்த நிலையில் சமீப காலமாக தனது மாடர்ன் புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார். மேலும் இவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர் வியப்பில்  உறைந்தனர். அதில் இவர் தோழிகளுடன் நீச்சல் குளத்தில் உள்ள சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.அது தற்பொழுது சமூக வலைதளங்களில் பெரிதும் வைரளாகி வருகிறது.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kamna Jethmalani (@kamana10)

 

View this post on Instagram

 

A post shared by Kamna Jethmalani (@kamana10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here