தூத்துக்குடி எனும் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது இப்படத்தின் இயக்குனர் சஞ்சய்ராம் மற்றும் தயாரிப்பாளர் சுனிதா ஹரி,
மேலும் இப்படத்தின் கதாநாயகனாக ஹரிகுமார் நடித்திருந்தார், இவருக்கு ஜோடியாக கார்த்திகா மற்றும் ஸ்வேதா நடித்துள்ளார்.
இப்படத்தில் இடம் பெற்ற ‘கருவாபையா’ என்ற பாடல் மட்டுமில்லாது கார்த்திகாவின் நடனமும் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட் ஆனது.
அடுத்த கார்த்திகாவின் படமானது’பிறப்பு’.இத்திரைபடத்தில் ‘உலக அழகி’ நான் தான் என்ற பாடல் பெரிதளவில் பேசப்பட்டது.

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தவர் 1991 ஆம் ஆண்டு திருக்கடையூர் என்ற ஊரில் பிறந்தவராவார் அதன் பின்னர் ஆடிசன் மூலம் தூத்துக்குடி
எனும் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் ‘நாளைய பொழுது உன்னோடு’ ‘மதுரை சம்பவம்’ ராமன் தேடிய சீதை’ போன்ற படங்களில்
நடித்தாலும் பிரபலமான நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.அதன் பின்னர் இறுதியாக ‘இவர் பட்டாளம்’ என்ற திரைபடத்தில் 2012 ஆம்
ஆண்டு நடித்திருந்தார்.

அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் கமிட் ஆக உள்ளார்.இவர் தமிழ் படங்களில் நடித்து கொண்டிருந்த பொழுது தங்கையின்
படிப்பிற்காக மும்பை செல்லும் காரணத்தால் இவர் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.மீண்டும் சென்னை வந்த பொழுது இவரை பார்த்த
மக்கள் மற்றும் உறவினர்கள் பலர் நீங்கள் ஏன் மீண்டும் நடிக்க கூடாது என கேட்டனர்.

அதற்காக காத்திருந்த பொழுது தான் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது,அதன் மூலம் திரை உலகிற்கு ரீ என்ட்ரி
கொடுத்துள்ளார்.அதே சமயம் தமிழில் 2 திரை படம் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது என கார்த்திகா சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here