தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு கதாநாயகிகளுக்கும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த காமெடி நடிகர்களுக்கு எப்பொழுதும் பஞ்சம் இல்லை என்பதுதான் உண்மை. சீசனுக்கு சீசன் புது புது காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்கள். ஏற்கனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகர்கள் நாளடைவில் எதாவது ஒரு திரைப்படத்தில் மக்களால் ஈர்க்கப்பட்டு அந்த சீசனில் முன்னணி காமெடி நடிகராக நடிக்கறார், கடந்த சில வருடங்களாக நடிகர் நாகேஷில் தொடங்கி இன்று யோகி பாபு வரை இதே நிலைதான்.
இப்படி தமிழ் சினிமாவில் லோடுக்கு பாண்டியாக அறிமுகமாகி பினனர் இன்றுவரை காமெடியில் காலக்கி வருபவர் நடிகர் கருணாஸ். நந்தா திரைப்படத்தின் மூலம் தமி சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்தடுத்த படங்களில் பல உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் ஜோடிபோட்டு காமெடி நடிகராக நடித்து இருக்கிறார். 2000 ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய இவர் குறைந்தது வருடத்திற்கு பத்து படங்களாவது நடித்திருப்பார் அந்த அளவிற்கு பெரும் புகழும் ஒரு காலத்தில் பெற்றிருந்தார்.
பின்னர் மற்ற காமெடி நடிகர்களை போலவே காமெடியில் பல வருடங்கள் கலக்கி விட்டு பின்னர் ஹீரோவாக நடிக்கலாம் என முடிவெடுத்தார். இப்படி ஒரு சில படங்களான திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி படங்களில் முழு ஹீரோவாக நடித்திருந்தார், சொல்லப்போனால் அந்த திரைப்படங்களும் ஓரளவுக்கு ஓடியது என்றுதான் சொல்ல வேண்டும்.
அதான் பிறகு அரசியலில் நுழைந்த இவர் சினிமாவிற்கு முழுக்கு போட்டு எந்த படங்களிலும் காட்சியளிக்காமல் இருந்தார், பினனர் டார்லிங், கழுகு படங்கள் ரீஎன்றி கொடுத்தாலும் அதான் பிறகு படங்களில் நடிக்கவில்லை இந்நிலையில் திண்டுக்கல் சாரதி இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாகவும் அதற்க்கு கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது மட்டுமல்லாமல் புகைப்படமும் வெளியானது. ஆனால் இதனை மறுத்த லக்ஷ்மி மேனன் அது கொம்பன் படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.