தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பல நடிகைகளும் இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள் இதற்கு காரணம் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் வராத நிலையிலும் மேலும் அதன் பின் கணவர் நடிக்க விடுவார்களோ என்ற நிலையில் வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் தற்சமயம் கொரோனா காரணமாக படபிடிப்புகள் ஏதும் நடைபெறாத நிலையில் பல முன்னணி நடிகைகள் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் குடும்ப வாழ்க்கையில் கவனத்தை செலுத்தலாம் என எண்ணிய நிலையில் திருமணம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பல முன்னணி நடிகைகள் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை கயல் ஆனந்தி. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் தெலுங்கில் கடந்த 2012-ம் ஆண்டு ஈ ராஜுலு எனும் படத்தின் மூலம் திரையுலகில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். மேலும் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் இந்த வகையில் தெலுங்கை தொடர்ந்து தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு பொறியாளன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இந்த படத்தில் இவரது சுட்டித்தனமான நடிப்பு மற்றும் அழகால் பல மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இருப்பினும் இவருக்கு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் கொடுத்தது என்னமோ கயல் படமாகும். இந்த படத்தின் பிரபலத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் ஆனந்தி அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் சாக்ரடிஸ் என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர் வேறு யாரும் இல்லை மூடர்கூடம் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரும் நடிகருமான நவீன் அவர்களின் மைத்துனர் ஆவார். அலாவுதீன் அற்புத கேமரா மற்றும் அக்னி சிறகுகள் போன்ற பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் ஆனந்தி இவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து விலக மாட்டேன் மேலும் நான்கு படங்களில் நடித்து வருகிறேன் அந்த படங்களில் நடித்து முடித்த பிறகே மேற்கொண்ட முடிவுகளை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். இவ்வாறு இருக்கையில் திருமணம் முடிந்த நிலையில் தற்போது எழு மாதம் கர்ப்பமாக உள்ளார் ஆனந்தி மேலும் இவருக்கு விரைவில் வளைக்காப்பு நடந்த போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here