தென்னிந்திய சினிமாத்துறையில் பல வருடங்களாக நடிகைகளாக நடித்தாலும் இன்னும் மக்களிடையே பிரபலமாகாத நிலையில் திரைத்துறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே முன்னனி நடிகர்களுடன் நடித்தது மட்டுமின்றி பிரபலத்தின் உச்சிக்கு சென்றவர் தான் ரியாக்சன் க்யூன் கீர்த்தி சுரேஷ்.மலையாளத்தில் பிரபல இயக்குனர் சுரேஷ் மற்றும் பிரபல நடிகை மேனகா அவர்களின் மகள் தான் கீர்த்தி சுரேஷ்.2000-ம் வெளியான பைலட்ஸ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன.மாயம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

அதன் பின் தன் அழகாலும் திறமையான நடிப்பாலும்  ரசிகர்களிடையே கனவுகன்னியாக இருந்து வருகிறார்.இவர் தற்போது தமிழ்,மலையாளம்,தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழிகளில் பிஸியாக வலம் வருகிறார்.இவ்வாறு அழகு பதுமையாக இருக்கும் கீர்த்தி சுரேஷிற்கு ரேவதி சுரேஷ் எனும் அக்காவும் இருக்கிறார்.அவரது அக்கா ரேவதி சுரேஷ் தற்போது தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவரது பழைய புகைப்படத்தையும் சமீபத்திய புகைப்படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.அந்த பழைய புகைப்படத்தில்  குண்டாக இருப்பதுபோல் உள்ளது.அதுபற்றி ரேவதி சுரேஷ்  தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.அதில் ,என் வாழ்க்கை முழுவதும் எடை பிரச்சனையுடன் போராடி வருகிறேன்.என் அம்மா மற்றும்.தங்கையுடன் ஒப்பிட்டு என்னை நிறைய கேலி செய்திருகிறார்கள்.

மேலும் அம்மா மற்றும் தங்கை போல் நான் அழகில்லையோ என எண்ணி பல முறை வருத்தபட்டு இருக்கிறேன்.இந்திலையில் யாருன்னே தெரியாமல் பார்ப்பவர்கள் எல்லாரும் என் பருமனான தோற்றத்தைப் பார்த்து கேலி செய்வது மட்டுமில்லாமல் எனக்கு அட்வைஸ் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.இதை எண்ணி ஒரு கட்டத்துல என்ன நானே வெறுக்க ஆரம்பிச்சிட்டேன்.இப்படி நான் துவண்டு போன நிலையில் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது மட்டுமின்றி நான் என்.உடல் எடையை 20 கிலோவுக்கு மேல்  குறைப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது எனது யோகா டீச்சரான தாரா சுதர்ஷன் தான்.

என் எடையை குறைத்ததே என்னுடைய முதல் சாதனை.இந்த சாதனைக்கு காரமான என் யோகா டீச்சருக்கு இந்த சாதனையை அர்ப்பணிக்கிறேன் என மனமுருகி எழுதியிருந்தார்.ரேவதி சுரேஷ் வெளியிட்ட தற்போதைய ஸ்லிம்மான புகைப்படத்தை பார்த்த கீர்த்தி சுரேஷ்,அப்படி போடு,லவ் லவ் லவ் உன்னை நினைத்து பெருமையாக உள்ளது “என்று பதிவிட்டுள்ளார்.ரேவதி சுரேஷ் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது இனி இவரையும் வெள்ளித்திரையில் பார்க்கலாம் என நம்பலாம்.கீர்த்தி சுரேஷை தொடர்ந்து ரேவதி சுரேஷீம் வெள்ளித்திரையில் வலம் வர வாழ்த்துக்கள்.என்ன தான் தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறிய போதிலும் தனது குண்டான புகைப்படத்தை வெளியிட வேட்கப்படுவோர் மத்தியில் ரேவதி சுரேஷின் தைரியத்திற்கு சல்யூட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here