தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ புதுமுக இளம் நடிகைகள் புதிது புதிதாக வந்த போதிலும் அந்த காலத்தில் நடித்த முன்னணி நடிகைகளை மறக்க முடியாது. அதிலும் 90-களின் காலகட்டத்தில் வலம் வந்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பலர் மனதில் கனவுகன்னியாக வலம் வருகிறார்கள் அந்த வகையில் தனது பப்ளியான தோற்றம் அழகான கன்னத்தில் குழி விழும் சிரிப்பு மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி நடிகை குஷ்பூ.

தற்போதும் கூட பல இளம் நடிகைகளை பார்த்து அவர்கள் சற்று பப்ளியாக இருந்தால் போதும் அப்படியே குஷ்பூ மாதிரி இருக்காங்க என சொல்லும் அளவுக்கு தனது தோற்றத்தால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார். மேலும் இவரது பெயரில் பல உணவுபொருட்களும் பலவகையான பொருட்களுக்கு இவரது பெயரை வைத்து அழைக்கும் அளவிற்கு பிரபலமாக உள்ளார் குஷ்பூ. மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார் இதனை தொடர்ந்து பல மொழிப்படங்களிலும் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

இதனை தொடர்ந்து இவரது நடிப்பு மற்றும் அழகால் மயங்கி ரசிகர்கள் பலர் இவருக்கு கோயிலே கட்டி உள்ளார்கள் அந்த அளவிற்கு திரையுலகில் படங்களில் தனது தோற்றத்தால் பலரை கிறங்கடித்தவர். இவ்வாறு பிரபலமாக இருந்த குஷ்பூ அவர்கள் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி அவர்களை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த குஷ்பூ அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து அரசியலில் களம்புகுந்து விட்டார். பல வருடங்களாக சினிமா பக்கம் வராமல் அரசியலில் இருந்த அம்மிணி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்தா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் குஷ்பூ மற்றும் சுந்தர் சி அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள் இருவரும் தனது அப்பா அம்மாவை அப்படியே உரித்து வைத்தாற்போல் செம குண்டாக இருப்பார்கள். இதனால் இவர்கள் பலமுறை உருவகேலிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இருவரும் தங்களது உடல் எடையை கிட்டத்தட்ட இருபது கிலோவுக்கு மேல் குறைத்து அப்படியே ஹீரோயின்களை போல மாறி உள்ளனர். மேலும் குஷ்பூ அவர்களும் தனது உடல் எடையை குறைத்து உள்ளார். இந்த வகையில் மூவரும் உடல் எடை குறைத்து இருக்கும் தங்களது புகைப்படத்தை தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் குண்டாக இருந்த குஷ்பூவின் மகள்களா இப்படி ஆளே மாரிபோயிட்டாங்க என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here