தமிழ் சினிமாவில் தற்போது திரைப்படங்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிரபல மொழிநடிகைகளே பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதிலும் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட பல நடிகைகள் தான் அதிகளவில் தமிழ் சினிமாவில் நடித்து வருவதோடு முன்னணி நடிகைகளாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பேட்ட.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் நல்ல பலனை கொடுத்தது. இந்நிலையில் இந்த படத்தில் சசிகுமார், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம், த்ரிஷா, சிம்ரன், மெகா ஆகாஷ் என முன்னணி நடிகர் பட்டாளமே நடித்து இருந்தார்கள். மேலும் இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தவர் பிரபல நடிகை மாளவிகா மோகனன். இந்நிலையில் இவர் இந்த படத்தில் சசிகுமாரின் ஜோடியாகவும் மேலும் வயதான அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.

இப்படி இருக்கையில் பலரும் இவர் வயதான நடிகை தான் என எண்ணி வந்தார்கள் இந்நிலையில் சமூக வலைதளங்களில் அம்மிணியின் மாடர்னான போட்டோசூட் புகைப்படத்தை பார்த்து அம்மிணி வயசானவங்க இல்ல இளம் வயசு சிட்டு என வர்ணித்து வருகிறார்கள். அந்த வகையில் அம்மிணி ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்கள். எப்போதும் சமூகவளைதலங்களில் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது அரைகுறை ஆடையில் தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

மேலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அம்மிணி வேற லெவலில் மாடர்னாக உடை அணிந்து தனது இளமையை வெளிகாட்டி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் மாளவிகா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஆண் ஒருவரை இறுக கட்டியணைத்து முத்தமிட்டபடி அம்மிணி கொடுத்துள்ள போசையார் அந்த நபர் காதலரா என்பது போன்ற பல கேள்விகளை அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here