தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளவர் இளைய தளபதி விஜய் அவர்கள். மேலும் தமிழகத்தில் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை உடைய நடிகர் என்றால் அது தளபதி விஜய் அவர்களாகத்தான் இருக்க முடியும். சினிமா துறையிலேயே இவருக்கு பல நடிகர் நடிகைகள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். அந்த அளவிற்கு பலரது மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய் அவர்கள். இந்நிலையில் இவருடன் நடிப்பதற்கு இன்றளவும் பல நடிகைகள் விரும்பி வருகின்றனர் எனலாம். மேலும் இவரது நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.

இதை தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் இவருடன் இணைந்து பல படங்களில் ஒருசில பாடல்களுக்கு மட்டும் நடனமாடி இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் மாளவிகா. இவர் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அல்டிமேட் ஸ்டார் தல அஜித்குமார் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு  வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் உன்னைகொடு என்னை தருவேன். இந்த படத்தில் தல அஜித்குமார் அவர்களுக்கு கதாநாயகியாக நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தல அஜித் அவர்களுடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே எனும் படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு தனது முதல் இரு படங்களிலுமே முன்னனின் நடிகருடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இவ்வாறான நிலையில் இதன் மூலம் தமிழ் சினிமாவில் பல படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன்  கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெறுவார் என எண்ணிய நிலையில் ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்து இருந்தார். இவ்வாறான நிலையில் தற்போது திரைப்படங்களில் ஒருசில பாடல்களுக்கு மட்டும் நடனமாடி வருகிறார்.

அப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் குருவி. இந்த படத்தில் தொடக்க பாடலான டன்டாணா டர்ணா எனும் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இது கூறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மாளவிகா,அந்த படத்தில் பாடலுக்கு நடனமாடும் போது நான் இரண்டுமாத கர்ப்பமாக இருந்ததாகவும்,அதன் காரணமாக அந்த பாடலில் சரிவர ஆடாமல் நடந்து கொண்டிருப்பேன் எனவும் கூறியிருந்தார்.இருப்பினும் அவருடன் நடனமாட முடியாதது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here