தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு சில நடிகைகள் நடித்த ஒரு சில படங்களிலேயே மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தங்களை அடையாளபடுத்தி கொண்டு பிரபலமாக உள்ளார்கள். மேலும் அவர்கள் தங்களது நடிப்பை காட்டிலும் அழகான தோற்றத்தாலும் கட்டழகும் கிளமாராலும் எளிதில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு அவர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் குஜராத்தை பூர்விகமாக கொண்டு பல லகி போட்டிகளில் கலந்து கொண்டு பல பட்டங்களை வாங்கியதோடு பல விளம்பர படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர் பிரபல நடிகை நமீதா.

ஆரம்பத்தில் பாலிவுட்டில் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இதன் மூலம் தன்னை பிரபலபடுத்தி கொண்டு தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எங்கள் அண்ணா. இந்த படத்தில் பிரபு தேவா, பாண்டிராஜ், வடிவேலு, மணிவண்ணன் போன்ற பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து இந்த படத்தில் விஜயகாந்த் அவர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை நமீதா அவர்கள். நடித்த முதல் படத்திலேயே தனது கட்டழகு தேகத்தால் அரேபிய குதிரை போன்ற தோற்றத்தாலும் பல ரசிகர்த்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு ஒரு சில படங்களுக்கு பின் கிளாமர் கதாபாத்திரங்களே அதிகளவில் வந்தது. இப்படி ஒரு நிலையில் அதை தவிர்க்காமல் அதிலும் தனது வேற லெவலில் நடிப்பை வெளிப்படுத்தி அவரது ரசிகர்களை வாயடைக்க வைத்தார். இந்நிலையில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாமல் போனது இதன் காரணமாக சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் நடுவராக களம் கண்டு வந்தார். இவ்வாறு இருக்கையில் சின்னத்திரையில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாசில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரது கவனத்தை தன் பக்கம் இழுத்தது மட்டுமின்றி வேற லெவலில் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து இனி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என எண்ணிய நமீதா கடந்த 2017-ம் ஆண்டு தனது நீண்ட நாள் நெருங்கிய நண்பரான வீரேந்திரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் சினிமாவை தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தி வந்த நமீதா தற்போது அதையும் விடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையில் தற்சமயம் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைகாட்சியில் பிரபல தொடரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here