தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி மவுசுதான். அதிலும் கவர்ச்சி நடிகைகளுக்கு அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் தனி பட்டாளமே உள்ளது .இருப்பினும் பல இவர்கள் நீண்ட காலம் சினிமாத்துறையில் தொடர முடிவதில்லை. அந்த வகையில் கவர்ச்சி புயல் நமீதாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. 39-வயதான நமீதா கபூர் குஜராத் மாநிலத்தை சேர ந்தவராவார். முதலில் மாடலாக தன் பயணத்தை தொடர்ந்த நமீதா 2001-ம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பிடித்தார். அதன் பின் விளம்பர படங்களில் நடித்து வந்த தெலுங்கில் வெளியான சொந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தமிழில் எங்கள் அண்ணா படத்தில் மக்களிடையே பிரபலமானார்.இதனைத் தொடர்ந்து ஏய், பம்பர கண்ணாலே, நான் அவன் இல்லை, போன்ற பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். தனது கவர்ச்சியான உடலமைப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட நமீதா படங்களில் அதிக அளவு நடிக்கவில்லை. இருப்பினும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் நடித்துள்ள நமீதா மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றியுள்ளார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு இவர் நடித்த திரைப்படங்கள் தோல்வியிலேயே முடிந்தது.

இதன் பிறகு திரையுலகில் கதாநாயகியாக நடிப்பதைத் தவிர்த்து சிறு கதாபாத்திரங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் 2017-ம் ஆண்டு இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் விஜய் , அஜித் என பல முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ள நமீதா பற்றிய வதந்திகள் சினிமா வட்டாரங்களில் வராத நாட்களே இல்லை எனலாம். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த நமீதா தன் உடல் எடையின் மீதும் கவனம் காட்டாமல் பருத்து குண்டாக இருந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் டிரெண்டாக இருக்கும் நமீதா தனது மாடர்னான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வதில் வல்லவர்.

அந்த வகையில் தற்போது தனது உடல் எடையை குறைத்து பிட்டாக மாறியிருக்கும் நமீதா போட்டோ ஷீட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.தனது எடையை குறைத்து கவர்ச்சி கன்னியாக மாறியிருக்கும் நமீதாவை மீண்டும் இணையத்தில் பார்த்த அவரது ரசிகர்கள் அவரது மாற்றத்தை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். என்னவோ என்னத்தான் படங்களில் நடிப்பதில்லை என்றாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி புயலாகத்தான் வலம் வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here