தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகை நமிதாவை தெரியாத ஆளே கிடையாது அந்த அளவிற்கு பிரபலமானவர் நமீதா அவர்கள்.இவர் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருகென்று ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.ஒரு காலத்தில் பல இளைஞர் மனதில் கனவு நாயகியாக திகழ்ந்தவர்.இவர் தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு வெளியான அன்றைய பிரபல நடிகரான விஜயகாந்த் வுடன் இணைந்து எங்கள் அண்ணா என்னும் படம் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார்.அந்த படத்தின் மூலம் இவர் குறுகிய கலகட்டதிலையே பல தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், இங்கிலீஷ் ஆகிய சினிமா திரைகளிலும் இவர் பணியாற்றியுள்ளார்.இவரது தெலுங்குவில் முதல் படமான சொந்தம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.நடிகை நமீதா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்து வந்தது.
நமீதா அவர்கள் 2017ஆம் ஆண்டு வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்ததல் இவர் பிரபல தொலைக்கட்சியில் நடத்திய ஷோவிற்கு ஜட்ஜாக பணியாற்றினார்.பட வாய்ப்புகளுக்காக காத்துகொண்டு இருக்கும் இவர் தற்போது ஒரு படத்தில் கமிடாகி நடித்து வருகிறார்.தற்போது இவரது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் இவரிடம் தவறாக பேசியுள்ளான்.இவரது அக்கவுன்டை ஹக் செய்து விட்டேன்.
உன்னுடைய புகைப்படங்களை வெளியிட போகிறேன் என்று கூறியுள்ளான்.அதை சற்றும் பொருட்படுத்தாத நமீதா அவர்கள் உன்னால் முடிந்ததை செய் என கூறியுள்ளார்.தற்போது நமீதா அந்த நபரது புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவனை திட்டிதீர்தனர். புகைப்படம் கீழே உள்ளது.