தென்னிந்திய சினிமாவில் தற்போது எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்த போதிலும் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவதோடு தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள். எத்தனையோ பல முன்னணி நடிகைகள் தற்போது ஒரு கட்டத்துக்கு மேல் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை இழந்து பரிதவித்து வரும் நிலையில் தொடர்ந்து பல வருடங்களாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்மிணி கல்யாண வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் அம்மிணி மீது காதல் மற்றும் திருமணம் பற்றி வராத வதந்திகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு பல நடிகர்களுடன் காதல் மற்றும் கசமுசா என பல கிசுகிசுக்கள் வந்த வண்ணமே இருந்தது. இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சமீபகாலமாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதோடு அவருடன் நெருக்கமாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என இதுவரைக்கும் பலமுறை தகவல்கள் வந்துவிட்டது இது கூறித்து பேசிய விக்னேஷ் சிவன் எங்களுக்கு சமூகவளைதலங்களில் இதுவரைக்கும் இருபதுக்கும் மேற்பட்ட முறை திருமணம் நடந்து முடிந்துள்ளது.

ஆனால் நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம் மேலும் எங்கள் இருவருக்கும் இடையேயான காதல் நன்றாக சென்றுகொண்டுள்ளது. அது எப்போது போர் அடிக்கிறதோ அப்போது நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டார் அதில் நயன்தாராவின் கையில் மோதிரம் இருப்பதை தனியாக புகைப்படம் எடுத்து அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே நிச்சயம் முடிந்து இருக்குமோ என பலர் எண்ணி வந்த நிலையில் அதை உறுதிபடுத்தும் வகையில் தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி இருக்கையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நயன்தாராவிடம் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்டதற்கு இதுவா இது என்னுடைய நிச்சய மோதிரம் என கூறியுள்ளார். மேலும் எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயம் முடிந்து விட்டது நாங்கள் கொஞ்சம் பிரபலமாக இருப்பதால் இதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டோம் ஆனால் எங்கள் திருமணம் அனைவருக்கும் தெரியும்படியாக வெகு விமர்சையாக நடக்கும் என கூறியுள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here