தென்னிந்திய சினிமாவில் பல இளம் நடிகைகள் தற்போது தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பினும் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகைகளில் முதன்மையாக இருப்பதோடு பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு கனவுகன்னியாக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. பல வருடங்களாக சினிமாவில் கதாநாயகியாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதோடு பல முன்னணி நடிகைகள் மற்றும் திரையுலகில் தனக்கென தவிர்க்க முடியாத ஒரு இடத்தை இன்றளவும் நிலையாக வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா அவர்கள்.

பல முன்னணி நடிகைகள் திருமணத்திற்கு பின்னரும் ஒரு கட்டத்துக்கு மேல் வயதை கடந்த நிலையிலும் சினிமாவில் அவ்வளவாக சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு இழந்து வரும் நிலையில் முப்பது வயதை தாண்டிய நிலையிலும் இன்றும் இளம் ஹீரோயின்களுக்கு போட்டியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் படங்களில் ஹீரோக்களுக்கு ஜோடியாக மட்டுமில்லாமல் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களில் தனித்து கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்மிணியின் மீது வராத வதந்திகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல நடிகர்களுடன் அம்மிணி காதல் வயப்பட்டார் என பல கிசுகிசுக்கள் தொடர்ந்து சினிமா உலகில் வலம் வந்த வண்ணமே இருந்தது.

இப்படி இருக்கையில் இதற்கு எல்லாம் முற்றுபுள்ளி வைக்கும் விதமாக கடந்த சில வருடங்களாக பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதோடு அவருடன் அடிக்கடி நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இருவரும் எந்த நிகழ்ச்சி மற்றும் சினிமா விழாக்களுக்கு சென்றால் ஒன்றாக செல்வது அவ்வபோது வெளிநாடுகளுக்கு பறப்பது என தங்கள் காதல் வாழ்க்கையை உலகறிய செய்து வருகிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என பல தகவல்கள் வெளியாகி வந்தன இந்நிலையில் சமீபத்தில் நயன்தாரா அவர்களின் தந்தை உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த நிலையில் இருவரும் ஒன்றாக கொச்சின் சென்று வந்தனர்.

இதை தொடர்ந்து இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இருக்கையில் சமீபகாலமாக அம்மிணி எந்த சொத்துக்கள் வாங்கினாலும் அதை தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் பெயரிலேயே பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்சமயம் பிரபல தனியார் நிறுவனமான சாய் வாலே எனும் டீ நிறுவனத்தில் ஒரு ஏஞ்சல் பங்குதாரராக தனது காதலர் விக்னேஷ் சிவன் பெயரில் ஐந்து கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளார். இந்த வகையில் டீ கடை என்றாலே அது மலையாளிகள் தான் எனலாம் காரணம் நம் தமிழ்நாட்டில் பல இடங்களில் டீ கடை வைத்திருப்பவர்கள் என்றால் அது மலையாளிகள் தான். இந்நிலையில் தானும் மலையாளிதான் தான் என நிருபிக்கும் வகையில் டீ கடை பிசினசில் களம் இறங்கியுள்ளார் அம்மிணி.

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here