தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் முதன்மையானவராக வலம் வருவதோடு கோடிகளில் அதிக அளவில் சம்பளம் என்றால் அது பிரபல முன்னணி நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு பல படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து வருகிறார் . இவ்வாறு திரையுலகில் பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் மீது வராத காதல் வதந்திகளே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளார் . இப்படி இருக்கையில் இதனை எல்லாம் தவிர்க்கும் வகையில் கடந்த சில வருடங்களாக பிரபல முன்னணி இயக்குனர் விக்னேஷ் சிவனும்

நயன்தாராவும் காதலித்து வருவதோடு அடிக்கடிவெளியில் செல்வது இருவரும் நெருக்கமாக இருக்கும்படியான புகைபடங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவது என இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்கும்போது இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மலர்ந்தது. இதையடுத்து இருவரும் தற்போது வரை காதலர்களாக இருந்து வரும் நிலையில் பலரும் இவர்களது திருமணம் எப்போது என தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்த நிலையில் இவர்கள் இருவர்க்கும் ஏற்கனவே ரகசியமான முறையில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

மேலும் இதனை உறுதிபடுத்தும் வகையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் நயன்தாரா தனது கையில் மோதிரம் அணிந்திருந்தார் அதுமட்டுமின்றி சமீபத்தில் கூட இணைந்து காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்த நிலையில் அம்மிணி நெற்றி வடிவில் குங்குமம் இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியானதை அடுத்து இருவருக்கும் திருமணமும் முடிந்து விட்டது என தகவல்கள் வந்தது. இந்நிலையில் இது குறித்து விசாரித்த போது அது வெறும் வீண் வதந்தி என இறுதியில் தெரிய வந்தது இப்படி இருக்கையில் எப்போது தான் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என இருக்கும் நிலையில் இதற்கான முடிவு தற்போது தெரிய வந்துள்ளது. அதன்படி தற்போது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல்

படத்தை இயக்கி முடித்துள்ளார் இதனையடுத்து தல அஜித்தை வைத்து படத்தை இயக்கவுள்ளார் அந்த படம் முடிந்த கையுடன் இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாக கூறியுள்ளார். அதேபோல் நயன்தாராவும் பாலிவுட்டில் ஷாருகனுடன் லயன் படத்தில் நடித்து வருகிறார் மேலும் தெலுங்கில் காட்பாதர் தமிழில் கனெக்ட் படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படத்திலும் அம்மிணி கமிட் ஆகாத நிலையிலும் நயனின் அப்பா ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் காரணத்தால் தான் விரைவாக நிச்சயம் நடந்தது அதன் காரணமாக கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here