தமிழ் சினிமாவில் படங்களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகள் கடந்த சில மாதங்களாக படங்களில் நடிப்பதை தவிர்த்து தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள். இதற்கு காரணமாக இருந்தது என்னவோ கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் காரணமாக படபிடிப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தது ஒன்று என்றால் தற்போது பல இளம் நடிகைகள் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் காரணத்தால் முன்னணி நடிகைகள் பலருக்கும் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் அவர்கள் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தமிழ்

திரையுலகில் கடந்த 2011-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த உதயன் படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை தமிழ் மக்களிடையே அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை பிரணீதா சுபாஷ். இந்த படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடித்து தன்னை மேலும் திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டார். அதன் பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மாஸ் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருவார் என எதிர்பார்த்த நிலையில்

தமிழில் இவருக்கு அவ்வளவாக ஹீரோயின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் கன்னடம், மலையாளம், தெலுங்கு வேறு மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த வருடம் பெங்களூருவை சேர்ந்த முன்னணி தொழிலதிபர் நிதின் ராஜுவை சத்தமில்லாமல் திருமணம் செய்துகொண்டார் . இவர்கள் இருவரும் பல வருடங்கள் காதலித்து வந்த நிலையில் இந்த விஷயம் இருவீட்டாருக்கும் தெரியவரவே அவர்களது சம்மதத்துடன் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களுடன் மிகவும் எளிமையான முறையில் திருமணத்தை முடித்து விட்டனர். திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து படங்களில்

நடித்து வந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணீதா சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு புகைப்படம் ஒன்றையும் பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் எனது கணவரின் 34-வது பிறந்தநாளில் எங்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என பதிவிட்டதோடு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாதை அடுத்து அவரது ரசிகர்கள் என்னது இப்ப தான் கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள குழந்தையா என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here