பொதுவாக தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் நடிகர்களாக நடித்து வருவதோடு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தையும் தனி ரசிகர் பட்டளாத்தையும் வைத்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களுக்கு சற்றும் குறையாமல் பல முன்னணி நடிகைகளின் வாரிசுகளும் திரையுலகில் நடித்து வருகின்றனர். இருப்பினும் இவர்களுக்கு நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு வரவேற்பு நடிகைகளுக்கு கிடைப்பதில்லை காரணம் இவர்கள் ஒரு சில படத்திலேயே கதாநாயகியாக நடித்த பின்னர் ஆளே அடையாளம் தெரியாமல் போய் விடுகின்றனர்.
இப்படி இருக்கையில் 80,90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிதுள்ளதோடு பல இளைஞர்களின் மனதில் இன்றளவும் கனவுகன்னியாக வலம்வருபவர் பிரபல முன்னணி நடிகை ராதா அவர்கள். அந்த காலத்தில் பல முன்னணி நடிகைகள் இருந்தபோதிலும் தனக்கென தனி அடையாளத்தையும் முன்னணி ஹீரோயின்களில் முதன்மையானவாராகவும் இருந்து பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர். இவ்வாறு அந்த காலத்தில் பிசியான நடிகைகளில் ஒருவராக நடித்து வந்த ராதா கடந்த 1996-ம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவருக்கு கார்த்திகா துளசி என இரு மகள்களும் விக்னேஷ் எனும் ஒரு மகனும் உள்ளார்கள் இதில் மூத்த மகளான கார்த்திகா தனது கல்லூரி படிப்பை முடித்து அம்மாவை போலவே நானும் முன்னணி கதாநாயகியாக வேண்டும் என முடிவெடுத்து தெலுங்கில் கடந்த 2009-ம் ஆண்டு வெளிவந்த ஜூஸ் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர். மேலும் அறிமுகமான முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்குக்கான விருதை வென்றார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ் கடந்த 2011-ம் ஆண்டு பிரபல முன்னணி நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோ திரைபடத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை பிரபலபடுத்தி கொண்டார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்துள்ள இவருக்கு அதன் பின்னர் அவ்வளவாக படவாய்ப்புகள் வரவில்லை. இப்படி இருக்கையில் பட வாய்ப்புகள் ஏதும் வராத நிலையில் ஹிந்தியில் சீரியல் பக்கம் நகர்ந்து அங்கு சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் நான்கு மாதங்களிலேயே முடிவடைந்து போக என்ன செய்வது என்று தெரியாத நிலையில் சினிமாவை முழுவதுமாக தவிர்த்து தனது குடும்ப தொழிலை கவனிக்க இறங்கி விட்டார்.
அந்த வகையில் ராதா குடும்பத்திற்கு கேரளாவில் மூன்று பைவ் ஸ்டார் ஹோட்டல்களும் ஸ்கூல், சினிமா தியேட்டர், கல்யாண மண்டபம் என பல தொழில்களை செய்து வருகிறார்கள்.இந்நிலையில் இதில் ஹோட்டல் வேலைகளை கவனித்து வரும் நிலையில் கார்த்திகா அவர்களின் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரளாகி வருகிறது.