ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ராதிகா அப்தே.இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகர்களுடன்இணைந்து பல படங்களை நடித்துள்ளார்.இவர் ஹிந்தி மட்டுமல்லாமல் தமிழ்,மலையாளம், தெலுங்கு மற்றும் மராத்தி மொழி சினிமாவில் நடித்து அந்த துறையில் இவருகேன்று பல ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

இவர் ஹிந்தியில் பேன்டசி படமான vaah!life ho toh aisi மூலம் அறிமுகமாகி பின்பு ஹிந்தியில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.நடிகை ராதிகா அப்தே அவர்கள் தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமாகி பிறகு படிபடியாக தமிழ் சினிமா வில் படங்களை நடிக்க தொடங்கினர்.இவர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகா வளம் வரும் ரஜினி காந்த அவர்களுடன் இணைந்து கபாலி படத்தில் நடித்து எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

தற்போது நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகம்.அதேபோல் நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றல் பல இன்னல்களை தாண்டி தான் வர வேண்டியதாக இருகின்றது.நான் நடித்துக்கொண்டு இருந்த ஒரு படத்தில் அந்த படத்தின் முன்னணி நடிகர் என்னிடம் முதல் நாள் அன்றே அவரது சில்மிசத்தை காமிக்க தொடங்கினார்.மேலும் அவர் என் பாதங்களை தொட்டு வருடினார்.நான் கோபத்தில் அவரை அறைந்து விட்டேன்.பின்பு இன்னொரு தடவை வேறு ஒரு ஷூட்டிங் ஒன்றில் எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டு வழியால் துடித்து கொண்டு இருந்தேன்.

அப்போது என்னிடம் ஒருவர் நான் இன்று இரவு உங்களுக்கு முதுகு புடித்து விடவா என கேட்டார்.இந்த விஷத்தை நான் தயாரிப்பாளரிடம் கூறினேன் அவர் மறு நாள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்.மேலும் இது போல் பல பிரச்சனைகள் ஒரு நடிகைக்கு உள்ளது என கூறியுள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.