பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி பலரது வாழக்கையை முன்னேற செய்துள்ளது அந்த அளவிற்கு இந்த சேனலில் வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மூலம் பலர் தங்களது திறமைகளை எளிதில் மக்களிடையே அடையாளம் காட்டுவதோடு அதற்கான பலன்களையும் வரவேற்பையும் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் பிரபல முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தொடரில் சமையல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு தனி ரசிகர் பட்டளாத்தையும் வைத்திருப்பவர் தான் ரம்யா பாண்டியன்.

இவர் முதன் முதலில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இருப்பினும் இவர் இந்த படத்தில் நடித்து பிரபலமானதை காட்டிலும் தனது வீட்டின் மொட்டை மாடியில் மாடர்னாக போடோஷூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டதன் மூலமே பெருமளவு பிரபலமடைந்தார் எனலாம். இந்நிலையிலேயே இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தற்போது மக்கள் மத்தியில் வெகு பிரபலமாக உள்ளார். இவ்வாறான நிலையில் பலரும் இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் என நினைத்து வருகிறார்கள்.மேலும் தும்பா பட நடிகை கீர்த்தி பாண்டியன் இவரது தங்கை எனவும் கூறி வருகிறார்கள். உண்மையில் ரம்யா பாண்டியன் அருண் பாண்டியனின் உறவினராம் மத்தபடி ஏதும் இல்லையாம். அருண் பாண்டியன் அவர்கள் அந்த காலத்தில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் இருப்பினும் அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது பல படங்களை தயாரித்து வருகிறார்.

இப்படி இருக்கையில் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளார்கள் அவர்கள் கவிதா, கீரனா மற்றும் கீர்த்தி பாண்டியன். இதில் கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் நடிகையாக நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் தும்பா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் வென்ற இவர் தற்சமயம் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது தனது மாடர்னான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் நீச்சல் உடையில் படு மாடர்னாக இவர் கொடுத்திருக்கும் போஸ் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here