தென்னிந்திய சினிமாவில் பொருத்தவரை பல முன்னணி நடிகைகள் இன்றளவும் பல ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக வலம் வருகிறார்கள் மேலும் இதில் பல முன்னணி நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேலும் திருமணத்திற்கு பிறகும் அவ்வளவாக படங்களில் நடிப்பதும் இல்லை அதனை தொடர்ந்து படவாய்ப்புகளும் அவர்களுக்கு சரிவர வருவதில்லை. இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரும் தற்போதும் முன்னணி நடிகையாக இருப்பதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் தான் பிரபல முன்னணி நடிகை சமந்தா.

படங்களில் வெறும் பெயருக்கு கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு படவாய்ப்புகள் அவ்வளவாக வராத நிலையில் சமந்தாவிற்கு அதற்கு நேர்மாதிரியாக திருமணத்திற்கு பின்னர் தான் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. மேலும் சமந்தா அவர்களின் ரசிகர் பட்டாளமும் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே போகிறது எனலாம்.

மேலும் அம்மிணி முன்பை விட தற்போது மாடர்ன் காட்சிகளில் தாராளம் காட்டி நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட தி பேமலி மேன் எனும் வெப் சீரியஸில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதோடு பாராட்டுகளையும் பெற்று தந்தது. இப்படி இருக்கையில் தற்போது சமந்தா தெலுங்கில் வெளியாகவுள்ள சாகுந்தலம் எனும் படத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படம் இதிகாச கதையான மகாபாரதத்தை மையமாக வைத்து எடுக்கபட்டு வருகிறது.

மேலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை இணையபக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை திணறடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சமந்தா அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு அவருடன் ஒன்றாக இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் மிகவும் குட்டையான உடையில் போஸ் கொடுத்திருக்கும் அம்மிணியை பார்த்து அவரது ரசிகர்கள் கலாயித்து வருகிறார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here