பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை பற்றி தொடர்ந்து வதந்திகள் வந்த வண்ணம் இருப்பது இயல்பான ஒன்றே அதிலும் ஒரு சில முன்னணி நடிகர் நடிகைகள் என்ன செய்தாலும் அது மக்களிடையே பெரிதளவில் பிரபலமாகி பல்வேறு வகையில் கிசுகிசுக்களாக மாறிவிடும். இதன் காரணமாகவே பல முன்னணி சினிமா பிரபலங்கள் எந்த ஒரு விசயத்தையும் வெளியில் அவ்வளவாக காட்டி கொள்ளாமல் அதிகம் பொதுவெளியில் வராமல் தங்களை முடிந்தவரை தனிமைபடுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையிலும் இவர்கள் செய்யும் சிறு செயலானாலும் அது மக்களிடையே வெளியாகி மாபெரும் செய்தியாக மாறி விடுகிறது.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. ஆரம்பத்தில் மாடலிங் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார் இதனை தொடர்ந்து இதன் மூலம் பிரபலமடைந்து சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதனை திறம்பட பயன்படுத்தி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம். ஹிந்தி, கன்னடம் என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து உள்ளதோடு பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். இந்நிலையில் இவர் பிரபலமாக இருக்கும் நிலையிலேயே கடந்த 2017-ம் ஆண்டு பிரபல தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா அவர்களின்  மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் பல முன்னணி நடிகைகள் நடிப்பிற்கு முழுக்கு போட்டு வரும் நிலையில் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சமந்தா.அதிலும் கல்யாணத்திற்கு முன்னர் விட தற்போது தான் கிளாமரில் கொடிகட்டி பறக்கிறார் அம்மிணி எனலாம். அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் வெளிவந்த பேமிலி மேன் வெப் சீரியஸில் வேற லெவலில் நடித்து மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியிருந்தார். இப்படி இருக்கையில் திருமணத்திற்கு பின்னர் தனது பெயருக்கு பின்னால் தனது கணவரின் குடும்ப பெயரை சேர்த்து இருந்த சமந்தா தற்போது அதை தனது இணைய பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொள்ள போவதாக பல தகவகல்கள் சினிமா வட்டாரத்தில் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இது கூறித்து சமந்தாவிடம் கேட்டபோது எனக்கு கோவாவில் வசிக்க ரொம்ப பிடிக்கும் அதனால் அங்கு ஒரு இடம் வாங்கியுள்ளோம் அதில் பண்ணை வீடு கட்டி வசிக்க உள்ளோம் இந்நிலையில் எங்கள் இருவருக்கும் இடையில் என்ன விவாகரத்து கருத்து வேறுபாடு என்று எதுவும் இல்லை இது எல்லாம் வீண் வதந்தி என சிரித்தபடி கூறியுள்ளார். இருப்பினும் தனது பெயரில் இருந்து அக்கினேனி என்பதை நீக்கியது கூறித்து ஏதும் சொல்ல மறுத்து விட்டார் சமந்தா. இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here