தமிழ் சினிமாத்துறையில் தமிழ் நடிகைகளை காட்டிலும் பிறமொழி நடிகைகளே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் திரைத்துறைக்கு வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் இருக்கும் நடிகைகளின் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் பிடித்திருப்பார் சமந்தா. தனது வசீகரத்தாலும் சிறந்த நடிப்புத்திறமையாலும் இன்றளவும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வரும் சமந்தா முதலில்  2010-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ஏ மாயா சேஷவே  படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இந்த படத்தில் சிறந்த நடிப்பின் மூலம் சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் அவார்டையும் பெற்றார்.

அதன் பின் தமிழில் நீ தானே என் பொன்வசந்தம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார். மேலும் பாணா காத்தாடி,அஞ்சான்,பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன், கத்தி, தெறி,நான் ஈ, போன்ற பல படங்களில் முன்னனி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். படங்களில் வெறும் கதைக்காக வந்தும் போகும் கதாநாயகிகள் மத்தியில் தனக்கு முக்கியத்துவம் தரும் தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் மக்களிடையே தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். இவ்வாறு தொடர்ந்து தமிழ் தெலுங்கு,மலையாளம் என பல மொழிகளில் பிஸியாக வலம் வந்த சமந்தா 2012-ம் ஆண்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் இரண்டு வருடங்கள் சினிமாப்பக்கம் வராமல் இருந்தார் சமந்தா.

இந்நிலையில் தமிழில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடித்ததன் மூலம் திரைத்துரைப்பயணத்திற்கு கீரின் சிக்னல் கொடுத்தார். இதற்கிடையே தெலுங்கில் முன்னனி நடிகரான நாகசைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வந்த நிலையில் 2017-ம் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடைப்பெற்றது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் திரைத்துறையில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவர் தனது சினிமா பயணத்தின் 11- வது நிறைவு விழாவை கொண்டாடும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தன்னை முதலில் அறிமுகப்படுத்திய இய்க்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு நன்றி தெரிவித்ததோடு 11 ஆண்டுகளாக தனக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதே போல் பேட்டி ஒன்றில் பேசிய சமந்தா,பல்லாவரத்தில் பிறந்த என்னால் முடிந்தது என்றால் உங்களாலும் முடியும் என கூறியிருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பல்லாவரம் வந்த சமந்தா அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டத்தோடு அதில் என்னுடைய  மொட்டை மாடியிலிருந்து தெரியும் மலைத்தான் எனக்கு பிடித்தமான இடம் மனிதர்களை விட இதற்குத்தான் என்னைப் பற்றி நன்கு தெரியும். பரீட்சை நாட்களில் கவலையான காலைகள், நான் நிறைவேற்றாத பல வாக்குறுதிகள், முதல் காதல் , முதல் நொருங்கிய மனம், நண்பனின் இறப்பு,கண்ணீர், குட் பாய் என அனைத்தும் இது அறியும் என உருக்கமான பதிவினை பதிவிட்டிருந்தார்.அப்படி என்றால் அவரது முதல் காதலன் யாராக இருக்கக் கூடும் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here