கடந்த சில மாதங்களாகவே பிரபல நடிகையான சாந்தினி அரசியல் பிரபலம் ஒருவர் மீது ரகசிய உறவில் இருந்த சர்ச்சை மீதான வழக்கை நீதிமன்றத்தில் தொடுத்துள்ளது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பொதுவாகவே சினிமா பிரபல நடிகைகள் பலரை அரசியல் பிரபலங்கள் தங்கள் ஆசைக்கு ஆளாக்கி கொள்வது என்பது இயல்பான வழக்கமாக மாறிபோய்விட்டது எனலாம். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் நாடோடிகள்.

இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் நடிகை சாந்தினி. இப்படி இருக்கையில் இவருக்கும் பிரபல முன்னணி கட்சி முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கும் பல வருடங்களாக ரகசிய உறவு இருந்து வந்துள்ளது. சொல்லப்போனால் கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இருவருக்குள்ளும்  நெருக்கமான பழக்கம் இருந்துள்ளது இந்நிலையில் சமீபகாலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பிரச்சனையில் போய் முடிந்துள்ளது.

இதன் காரணமாக சாந்தினி அவர்கள் மணிகண்டன் மீது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னை உடல் ரீதியாக ஏமாற்றி விட்டார் என போலீசில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட மணிகண்டன் எனக்கும் அந்த நடிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை என வாதிட அது இறுதியில் சத்தமில்லாமல் முடிந்து போன நிலையில் தற்போது மேலும் சர்ச்சை நடிகையின் வாயிலாக கிளம்பியுள்ளது.

நடிகை சாந்தினி சமீபத்தில் நான் வழக்கை திரும்பபெற்று கொள்கிறேன் அதற்கு பதிலாக எனக்கு பத்து கோடி நஷ்ட ஈடாக கொடுக்கும்படி கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கும் பட்சத்தில் சாந்தினி பணத்திற்காகதான் இந்த நாடகம் போட்டரா என பலர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் இந்த மாதிரியான தகவல் மக்கள் மத்தியில் பல கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here