தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து  அதன் பிறகு பட வாய்புகள் இல்லாமல் தடுமாறி வருகின்றனர். காரணம் அவர்களின் உடல் தோற்றத்தில் குண்டாக இருப்பதால் பட வாய்ப்புகளை இழந்து  இருகின்றனர். அப்படி இருந்தும் சில நடிகைகள் பட வாய்ப்புகளை பெறுவதற்காக தனது உடல் எடையை குறைக்க தீவிர உடல் பயிற்சியில் இருந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானவர் சனுஷா.

இவர் இந்த படத்தில் வாய்பேசமுடியாத பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் இதற்கு முன்னதாகவே விகாரம் நடித்த காசி படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது ரேணிகுண்டா தான். இதனை தொடர்ந்து பீமா, அலக்ஸ் பாண்டியன், எத்தன், கொடிவீரன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் தெலுங்கு சினிமாவில் நானி நடித்த ஜெர்சி படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சனுஷா .

இதில் ஒன்றான கோடி வீரன் படத்தில் நடிகர் சசிகுமாருக்கு தங்கையாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.மேலும் இவர் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் முன்னால் தன்னுடைய உடல் எடையை பற்றி கவலை படாமல் குண்டாக கொலு கொலு என இருந்தார்.

ஆனால் பல ரசிகர்கள்  இவரை கேலி கிண்டல் செய்து வந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு பதுலடி கொடுக்கும் படி தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் எழும்பும் தோலுமாக மாறிய புகைப்படம் வெளியிட்டுள்ளார் நடிகை சனுஷா. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here