தென்னிந்திய சினிமாவில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா எனும் பெரும் தொற்று நோயின் காரணமாக சின்னத்திரை வெள்ளித்திரை என எதிலும் படபிடிப்பு வேலைகள் ஏதும் நடைபெற முடியாத நிலையில் பல நடிகர்  நடிகைகள் என்ன செய்வது என்று தெரியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் மில்லை ஏற்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து இந்த கொரோனாவின் பாதிப்பாலும் மேலும் பல உடல்நலகுறைவாலும் பல முன்னணி சினிமா பிரபலங்கள் தொடர்ந்து காலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் உறைந்துபோய் இருப்பதோடு தினதொரும் பல இன்னல்களை சந்திந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தான் அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் படி பல விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு படபிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது. இப்படி இருக்கையில் இன்னும் திரையுலகில் காலமாகி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு அங்கு பல படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரபல நடிகை சரண்யா சசி. இவர் தமிழில் பச்சை என்கிற காத்து எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் மேலும் சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருந்த இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக இதற்கு சிகிச்சை எடுத்து வருகிறார். மேலும் இவருக்கு இந்த நோயின் காரணமாக எட்டு முறைக்கு மேலாக அறுவை சிகிச்சை செய்யபட்டுள்ளது இதற்காக மலையாள நடிகர் சங்கம் இவருக்கு தேவையான உதவிகளை இன்றளவும் செய்து வருகிறது. இப்படி இருக்கையில் இவருக்கு மூளையில் புற்றுநோய் கட்டி இருப்பதால் இவர் எளிதில் கொரோனா தொற்றுக்கு ஆளானர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்த இவர் கொரோனா மற்றும் பல உடல் குறைபாடுகளில் இருந்து சிகிச்சை பெற்று குணமான போதிலும் இவருக்கு ரத்தத்தில் சோடியம் அளவு குறைவாக இருப்பதாலும் நிமோனியா பாதிப்பாலும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 35-வயதே ஆன சரண்யா சசி நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார் இந்த தகவல் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு பல முன்னணி சினிமா பிரபலங்களும் மலையாள திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here