தமிழ் சினிமாவில் தற்போது எத்தனையோ பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்கள் வந்த போதிலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருப்பதோடு நடிப்பில் தனி சகாப்தம் படைத்தவர் என்றால் அது உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள். அந்த காலம் தொடங்கி இந்த களம் வரை தொடர்ந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு தென்னிந்திய சினிமாவில் தவிர்க்கமுடியாத தனக்கென தனி ஒரு முத்திரையை பதித்துள்ளார் எனலாம். அந்த வகையில் இன்றளவும் விடாது ஹீரோவாக நடித்து வருவதோடு பல இளம் நடிகர்களுக்கு போட்டியாக பல முன்னணி வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இவரை தொடர்ந்து இவரது மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என இருவரும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்கள். இருப்பினும் ஸ்ருதி ஹாசனுக்கு கிடைத்த வரவேற்பு சினிமாவில் அக்ஷர ஹாசனுக்கு கிடைக்கவில்லை அவர் ஒரு சில படங்களில் நடித்த பின்னர் அவருக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவ்வளவாக வரவில்லை. எனினும் ஸ்ருதி ஹாசன் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழ் மொழிப்படங்களை தொடர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக அம்மிணி படங்களில் ஆர்வம் காட்டுவதை காட்டிலும் இல்லற வாழ்க்கையில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பட வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாத நிலையில் லண்டனில் ஒருவரை காதலித்து வந்ததோடு அவருடன் நெருக்கமாக உறவிலும் இருந்தார். இவ்வாறு இருக்கையில் அவருடன் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதுபோல் பல புகைபடங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கையில் சில மாதங்களிலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடனான காதலை முறித்து கொண்டார் ஸ்ருதி. இதனை தொடர்ந்து சிறிது காலம் தனித்து வாழ்ந்து வந்த அம்மிணி தற்சமயம் சாந்தனு என்பவரை காதலித்து வருவதோடு அவருடன் லிவிங் டூ கேதார் வாழ்கை முறையை வாழ்ந்து வருகிறார்.

மேலும் அவருடன் அடிக்கடி வெளியில் செல்வது நெருக்கமாக இருக்கும்படியான புகைபடங்கள் எடுத்து தனது இணைய பக்கத்தில் பதிவிடுவது என தனது போக்கை கழித்து வருகிறார் ஸ்ருதி. இந்நிலையில் சமீபத்தில் அம்மிணியின் தொப்புளில் அவரது காதலர் வரைந்த ஓவியத்தை இணையத்தில் வெளியிட்டு வேற லெவலில் சர்ச்சையை கிளப்பினார். மேலும் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை பதிவிடுவதை தாண்டி அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்தும் வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவரது ரசிகர் ஒருவர் இணையத்தில் நீங்க எப்ப திருமணம் செய்து கொள்ள போறீங்க என கேட்டுள்ளார் அதற்கு அம்மிணி தற்போதைக்கு அந்த ஐடியா எல்லாம் துளியும் இல்ல அப்படி ஒரு நிலை வந்தால் அதற்கு நான் தாயாரும் இல்லை என்பது போல் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here