தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்களின் மகன் மற்றும் மகள்களும் தற்போது திரைத்துறையில் நடிகர் நடிகைகளாக  வலம் வந்த வண்ணம் உள்ளனர். இந்த வகையில் சினிமாத்துறையில் பல வருடங்களாக முன்னனி நடிகராக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன்.இவருக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் திரைத்துறையில் கதாநாயகிகளாக உள்ள போதிலும் ஸ்ருதிஹசனையே அனைவருக்கும் நன்கு தெரியும். ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பல் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இருப்பினும் ஸ்ருதிஹாசன் குழந்தையாக இருக்கும்போதே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அஜித்,தனுஷ், சூர்யா, விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்திற்கு பிறகு திரைத்துறையில் அதிகளவில் காணப்படவில்லை. இருப்பினும் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைகளை உண்டாக்குவதில் கைத்தேர்ந்தவர். மேலும் அதற்கு வரும் விமர்சனங்களுக்கு சற்றும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் தன் உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக மாறிய ஸ்ருதி தன் மாடர்னான புகைப்படம் ஒன்றை வெளியிட்டது வைரலானது. அதைப்பார்த்த அவரது என்ன இப்படி மாறிட்டிங்க,உங்கள இந்த மாதிரி பாத்ததில்லையை ,என்பது போலான பல கமெண்டுகளை தெறிக்க விட்டனர்.

இதனால் சற்று கடுப்பான ஸ்ருதி,நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன்.அதனால் நான் அசிங்கபடவில்லை.அதைப்பற்றி நான் எப்போதும் நான் விளம்பரப்படுத்தியதும் இல்லை.இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா,கிடையாவே கிடையாது,இது நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவரை எப்படி இருக்கிறார்களோ அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த நிலையில் ரசிகர் ஒருவர் கேட்ட தாறுமாறான கேள்விக்கு சற்றும் கோபப்படாமல் பதிலளித்தார் ஸ்ருதிஹாசன்.அந்த கேள்வி என்னவென்றால் நீங்க எந்த வயசில உங்க தொப்புள்ள வளையம் குத்தினீங்க என்று கேட்டிருந்தார். அதற்கு கொஞ்சம்கூட கோபப்படாமல் 19 வயதில் என்று உடனே பதிலளித்தார்.என்னத்தான் மாடர்னான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்வதோடு மட்டுமில்லாமல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளித்து வருகிறார்.மீண்டும் ஸ்ருதிஹாசனை திரைப்படங்களில் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here