தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதைய நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வைக்கும் மறுக்கபட்ட நிலையில் குழந்தை குடும்பம் என செட்டி ஆகி தனது குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நடிகைகள் இன்றளவும் பல முன்னணி படங்களில் தங்களுக்கென ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் அந்த காலகட்டத்தில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு திரையுலகில் தவிர்க்க முடியாத தனக்கென தனி ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்தவர் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட பிரபல முன்னணி நடிகை சினேகா.

தனது அழகான சிரிப்பு மற்றும் குடும்ப பாங்கான தோற்றத்தால் இன்றளவும் சினேகா பலரது மனதில் கனவுகன்னியாக இருந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் திரையுலகில் பிரபலமாக இருந்த சினேகா கடந்த 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது . இவ்வாறு இருக்கையில் பல காலம் காதலித்து வந்த சினேகா கடந்த    2012-ம்  ஆண்டு  பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு விகான் எனும் அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் சினேகா இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்தார். மேலும் அந்த குழந்தைக்கு ஆத்யந்தா எனும் பெயர் வைத்துள்ளனர் இது கூறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பிரசன்னா, எங்களுக்கு முதலில் பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டோம். அவ்வாறு பிறந்தால் அவளுக்கு ஆத்யா என பெயர் வைக்கலாம் என எண்ணினோம் ஆனால் முதலில் ஆண் குழந்தையாக இருந்ததால் அதை அப்படியே விட்டுவிட்டோம். இந்நிலையில் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவளுக்கு ஆத்யந்தா என பெயர் வைத்துள்ளோம். ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள் என பொருளாம்.

இப்படி இருக்கையில் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்த சினேகா உடல் எடை அதிகரித்து குண்டான தோற்றத்தில் இருந்தார். தற்போது அதை குறைக்க கடினமான உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அதனை வெளிக்காட்டும் வகையில் சமீபத்தில் போடோடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் குதுகலத்தில் உள்ளனர் எனலாம்.

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here