பொதுவாகவே சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றாலே பல அட்ஜஸ்ட்மென்ட்கலை கடந்து வர வேண்டிய நிலை அன்றிலிருந்து இன்றளவு வரை தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது எனலாம். என்னதான் திரையுலகில் எவ்வளவு முன்னோக்கி சென்றாலும் இது போன்ற நிலைகள் கதாநாயகியாக வாய்ப்பு தேடி வரும் இளம் பெண்களுக்கு நடந்து வருவது ஒட்டு மொத்த திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்த மாதிரியான நிகழ்வுகளை ஆரம்பகாலத்தில் சொல்லாமல் அந்த அட்ஜஸ்ட்மென்டை ஏற்ர்கொண்டு அதன் பின் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த பின் பல முன்னணி நடிகைகள் சில அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் மீடு மற்றும் சுசி லீக்ஸ் இது போன்ற பல தனியார் அமைப்புகளை அமைத்து தங்களது இன்னல்களை வெளிப்படுத்தி வருவதோடு பல சினிமா பிரபலங்களை கோர்த்து விட்டு வருகின்றனர். இந்நிலையில் பல முன்னணி நடிகைகள் இந்த மாதிரியான நிகழ்வுகளில் சிக்காமல் அதை தவிர்த்து தனது சுயமுயற்சியால் நடித்து அதன் மூலம் பிரபலமடைந்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இந்த மாதிரியாக தென்னிந்திய சினிமாவில் என்னதான் பிரபலத்தின் மகளாக இருந்து அதை வெளிகாட்டாமல் தனது நடிப்பு திறமையால் முன்னேறி தற்போது பாலிவுட் சினமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை சோனம் கபூர்.

இவர் பாலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் மேலும் இவர் பிரபல நடிகர் தனுஷுடன் இணைந்து ராஞ்சனா படத்தில் நடித்துள்ளார். இவ்வாறு தற்போது பிரபலமாக இருக்கும் சோனம் கபூருக்கும் ஆரம்ப காலத்தில் இது மாதிரியான ஒரு நிகழ்வு நடந்துள்ளதாம். அந்த வகையில் இவர் படவாய்ப்புகள் தேடிகொண்டிருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இவரிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்தார் என கூறியுள்ளார்.

மேலும் இவர் பட வாய்ப்புகள் கேட்க செல்லும் போது இவருடைய தங்கையான ரியா கபூரையும் உடன் அழைத்து செல்வாராம். இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் சோனம் கபூரை கேட்டது மட்டுமின்றி அவருடைய தங்கையும் சேர்த்து கேட்கிறாராம். இந்நிலையில் இந்த தகவல் இணையத்தில் வெளியாகி திரையுலகினர் மத்தியில் வைரளாகி வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here