சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது  பல நடிகர் நடிகைகளின் கனவாக இன்றளவும் உள்ளது எனலாம். ஆனால் அதற்காக அவர்கள் செய்யும் கடின உழைப்பு என்னதான் இருந்தாலும் அவர்கள் பிரபலத்தின் மகளாகவோ அல்லது வாரிசு நடிகர்களாக இருந்தால் மட்டுமே எளிதில் முடியும் என்பதை மாற்றி தற்போது பல புதுமுக நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையிலும் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை சினிமாவில் நடிகைகளாக நடிக்க வேண்டும் என்றால் அதற்காக அந்த நடிகைகள் கொஞ்சம் இணங்கி போக வேண்டி போகவுள்ளது எனும் வதந்தி பரவித்தான் வருகிறது. இதை வெளிபடுத்தும் வகையில் பல முன்னணி நடிகைகள் கூட சினிமாவில் ஒரு இடத்திற்கு வந்த பிறகு இந்த சர்ச்சை கூறித்து பலதரப்பட்ட தங்களது கருத்துக்களையும் நிகழ்வுகளையும் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் குற்றசாட்டை வெளிப்படுத்தி பல சர்ச்சைகளை உண்டாக்கி அதன் மூலம் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வெகு பிரபலமானவர் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கில் முன்னணி நடிகையான இவர் திரைபடங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானதை விட இந்த சர்ச்சையின் மூலமாகவே வெகு பிரபலமானார். இந்நிலையில் இவர் தெலுங்கில் உள்ள பல பிரபலங்கள் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பலர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் தனது வேலையை முடித்து தமிழ் பக்கம் வந்த இவர் இங்கேயும் விட்டு வைக்கவில்லை. தமிழ் திரையுலகிலும் பல சினிமா பிரபலங்கள் மீது தனது குற்றசாட்டை கொட்டி தீர்த்தார். இந்த வகையில் இவரது இந்த சர்ச்சையில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ், எ.ஆர் முருகதாஸ், விஷால் என பல முன்னணி சினிமா பிரபலங்கள் இவரது இந்த குற்றசாட்டுக்கு ஆளானர்கள். மேலும் இதற்காக ரெட்டி லீக்ஸ் எனும் அமைப்பை ஒன்றை உருவாக்கி அதன் மூலம் போராட ஆரம்பித்தார். இந்த அமைப்பின் மூலம் பல நடிகைகள் தங்களுக்கு நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இதன் காரணமாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அறவே போனது.

இதனால் இவர் சென்னையிலேயே செட்டில் ஆகி விட்டார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் சமூக வலைதளங்களில் அவ்வபோது தனது மாடர்ன் புகைபடங்களை வெளியுடுவதன் மூலம் பலவிதமான சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறார். தற்போது மாடர்ன் புகைபடங்களை வெளியிடுவதை எல்லாம் தாண்டி தான் குளிக்கும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here