இந்த கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா எனும் பெரும் தொற்று நோய் நம்மை ஆட்டிபடைத்து வருகிறது அந்த வகையில் பலரும் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திரையுலகிலும் படபிடிப்புகள் ஏதும் நடக்க முடியாமல் பல நடிகர் நடிகைகளும் செய்வது தெரியாமல் வீடுகளிலேயே தங்களது பொழுதை கழித்து வருகிறார்கள். மேலும் பலர் போடோஷூட் நடத்துவது உடற்பயிற்சி செய்வது தங்களது உடல் எடையை குறைப்பது என பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த வகையில் பல முன்னணி நடிகைகள் தங்களது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி  நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா. ஆரம்பத்தில் விளம்பர மாடலாக தனது திரைபயனத்தை தொடங்கிய இவர் தனது மெழுகு போன்ற தேகத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலமாகி படங்களில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். இதனை தொடர்ந்து தமிழில் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அடையாளபடுத்தி கொண்டார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடித்ததோடு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த அம்மினிக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் ஏதும் அவ்வளவாக வருவதில்லை இருப்பினும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு பிரபலமாக இருக்கும் அம்மிணியின் குடும்பத்தில் சமீபத்தில் அவரது அம்மா மற்றும் அப்பா என இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து இவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது இதனால் சிகிச்சை காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடந்த தமன்னா உடல் எடை கூடி பருத்து காணப்பட்டார்.

இந்நிலையில் இது கூறித்து பேட்டி ஒன்றில் பேசிய தமன்னா கொரோனா தொற்றின் போது நான் கடுமையான மருந்துகளை உட்கொண்டேன் இதனால் எனது உடல் எடை கூடியது மேலும் எனது புகைப்படத்தை பதிவிட்டாலே அனைவரும் என்னை குண்டு என்றுதான் அழைகிறார்கள் என புலம்பி தள்ளினார். இப்படி இருக்கையில் தனது உடல் எடையை குறைக்க முழுமனதுடன் உடற்பயிற்சி செய்து தற்போது மீண்டும் பழைய நிலைக்கு மாறியுள்ளார் தமன்னா. மேலும் அதை வெளிகாட்டும் வகையில் அரைகுறை ஆடையில் மாடர்னாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளார்.

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here