தமிழ் அந்த காலத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பல நடிகைகள் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டனர் எனலாம் காரணம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் திருமணத்திற்கு பின்னரும் அவர்களுக்கு திரையுலகில் படவாய்ப்புகள் குறைவதோடு பல இளம் நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் வலம் வந்த இருப்பதாலும் பல முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் ஏதும் அவ்வளவாக கிடைக்காத நிலையில் சினிமாவை தவிர்த்து குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு குறிப்பிட்ட சில முன்னணி நடிகைகள் தொடர்ந்து வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த வகையில் கடந்த 2007-ம் ஆண்டு மறைந்த பிரபல இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளியாகி இளைஞர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற திரைப்படம் உன்னாலே உன்னாலே. இந்த படத்தின் மூலம் ஹீரோவாக நடித்த வினய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகை தனிஷா முகர்ஜி. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல பாலிவுட் முன்னணி நடிகையான கஜோலின் தங்கை ஆவார். இவர் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களின் கதாநாயகியாக நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி அடையாளமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக இவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக வரமால் சரிய தொடங்கின. இதன் காரணமாக சினிமாவை தவிர்த்து சின்னத்திரை பக்கம் தன் கவனத்தை செலுத்தினார் தனிஷா. அதன் வாயிலாக பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 2013-ம் ஆண்டு போர்ட்டியலர்களில் ஒருவராக கலந்து கொண்டு இரண்டாவது பரிசையும் தட்டி சென்றார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான 47-வயதாகும் ஆர்மின் கோலியை காதலித்து வந்ததாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதாகவும் பல தகவல்கள் சினிமா வட்டாரத்தில் கசிந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் இன்னும் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார் தனிஷா. இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அவ்வபோது தனது மாடர்ன் புகைப்படங்களை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் நீச்சல் உடையில் செம மாடர்னாக இருக்கும் புகைபடத்தை வெளியிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here