தமிழ் திரையுலகில் பிற மொழி நடிகைகள் நடித்து அசத்தி வரும் இந்த காலத்தில் தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு தன் அழகால் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பிற மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை போல வெளிமாநிலத்தை சேர்ந்த இந்த நடிகை தமிழில் தான் முதன்முதலில் கதாநாயாகியாக அறிமுகமானார். இவர் தன்னுடைய முதல் படமானது ஆக்சன் கிங் அர்ஜுனுடன் தான் முடித்தார்.
‘மதராசி’ என்ற இப்படம் ஒரு ஆக்சன் கதைகளத்தை கொண்டிருந்த படம் என்பதால் இந்த படத்தில் கதாநாயகிக்கு பெரிதும் முக்கியத்துவம் கிடைக்கவில்லை. தமிழில் முதல் படம் பெரிதும் இவருக்கு ஹிட் கொடுக்காததால் ஹிந்தி திரையுலகில் நடிக்கும்
வாய்ப்பு கிடைத்து ஒரு பெரிய பட்ஜெட் படம் ஒன்றில் கமிட் ஆனார் இந்த கதாநாயகி. அந்த படத்திலும் இவருக்கு பெரிதும் ஹிட் கிடைக்காத காரணத்தால் தன்னுடைய பாதையை மீண்டும் தமிழ் மொழிப்படங்களுக்கே திருப்பினார்.
ராகவா லாரன்ஸ்சின் ‘முனி’ படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக நடித்து ஹிட் அடித்தார் இந்த நடிகை வேதிகா. அதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து அங்குள்ள ரசிகர்களையும் சம்பாரித்து வந்தார். தற்பொழுது எந்த மொழி படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காத வேதிகாவிற்கு புகைப்படம் ஒன்றால் படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. பொதுவாகவே ஒரு நடிகைக்கு படவாய்ப்புகள் குறைந்து விட்டால் எப்படியாவது தன் மார்கெட்டை உயர்த்துவதற்காக தங்களின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் எடுத்து எப்படியாவது பெரிய மார்கெட்டை பெற வேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.
அந்த வகையில் வேதிகாவும் பீச்சில் கிளாமராக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய அழகை வெளிக்காட்டி ஒரே புகைப்படத்தில் ஓஹோ என்று தன் மார்கெட்டை அதிகப்படுத்தி கொண்டார். தற்பொழுது பிரபலமான நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறாராம் வேதிகா.இந்நிலையில் அம்மிணியின் அந்த புகைப்படம் இணையபக்கத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram