தற்போது தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைப்படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் பார்க்கபடுவதோடு பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அந்த தொடர்களுக்கு முதன்மையாக இருப்பதோடு அடித்தளமாக இருப்பது பிரபல தொலைக்காட்சியான சன் டிவியாக தான் இருக்கும். மேலும் பல இல்லத்தரசிகளின் ஒரே சாய்ஸ் என்றால் அது இந்த சேனல் தான். மேலும் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் தொடர்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வெகு பிரபலம். அந்த வகையில் இந்த சேனலில் ஒளிப்பரப்பாகும் அழகு சீரியலுக்கு பலர் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள்.

மேலும் இந்த தொடரில் பிரபல முன்னணி நடிகையான ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதிராஜ் என பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த தொடரில் நடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த தொடரில் நடிகை ரேவதியின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி. இவர் ஆரம்பத்தில் தொடர்களில் நடிப்பதற்கு முன்னர் வெள்ளித்திரையில் அரூபம் எனும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் இதன் மூலம் பிரபலமடைந்து சின்னத்திரையில் பகல் நிலவு தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில் பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் அழகு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபகாலமாக கொரோனா காரணமாக ஒளிப்பரப்பு நிறுத்தபட்ட நிலையில் தற்போது கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் சஹானாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இது கூறித்து விசாரிக்க அவருடைய போன் நம்பருக்கு போன் செய்தால் எந்த பலனும் இல்லை.

இப்படி இருக்கையில் அவருடைய அம்மாவை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம் சஹானவிற்கு திருமணம் முடிந்து விட்டது எனவும் இது இருவீட்டார் சேர்ந்து ஏற்பாடு செய்த திருமணம் தான் மேலும் மாப்பிள்ளை டாக்டர் அபிஷேக் எனவும் கூறினார். மேலும் ஆடி மாதத்திற்கு முன்னரே திருமணத்தை முடிக்க முடிவு செய்ததால் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று என கூறினார். இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற தம்பதி அங்கே தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணையபக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியுள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here