திடிரென பிரபல தொகுப்பாளர் மருத்துவமனையில் அனுமதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

952

பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஆதித்யா டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் லோகேஷ் பாப். இவர் ஆதித்யா தொலைகாட்சியில் முக்கிய ஷோவான அட டேய் என்னும் ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். லோகேஷ் பாப் மற்றும் கோபி அவர்கள் இணைந்து அந்த ஷோவை அடுத்த லெவெலுக்கு எடுத்து சென்றார்கள்.

ஆதித்யா தொலைக்கட்சியினால் தொகுத்து வழங்கிய இந்த ஷோ மட்டும்மல்லாமல் அதில் ஒளிப்பரப்பு ஆகும் அணைத்து நிகழ்சிகளுக்கும் இவர் தொகுத்து வழங்கி வருவது மக்களுக்கு தெரிந்த ஒன்றே.இவர் சின்ன திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் தனது நடிப்பு திறமையால் நுழைந்தார்.இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நானும் ரவுடி தான் அந்த படத்தில் பல காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர்.அதில் இவர் சில சீன்களில் தோன்றுவார்.அந்த இடங்களில் தனது தத்ருபமான நடிப்பை வெளிகாட்டி இருப்பார்.

தற்போது இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த செய்தியை கலக்க போவது யாரு புகழ் திருச்சி சரவணகுமார் அவர்கள் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் உதவிகரம் கேட்டு பதிவிட்டுள்ளார்.

இவருக்கு கை மற்றும் கால் செயல் இழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய ஐந்து முதல் எழு லட்சம் வரை செலவாகும் என்று பதிவிட்டுள்ளார்.இவர் அந்த பதிவுடன் அவரது வங்கி கணக்கு என்னையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.மக்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here